பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற்கரை விபத்து 23

கடித்துக்கொண்டு, சட்டைப் பைக்குள்ளிருந்த பேனாக் கத்தியை யெடுத்துப் பிரித்து, குதிரையையும் வண்டியையும் சம்பந்தப் படுத்திக் கொண்டிருந்த கட்டுகளை அதிவிரைவில் அறுத்துக் குதிரையை வேறாக்கி பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் அதைக் கட்டிவிட்டு வண்டியை நோக்கி ஓடிவந்தான்.

அதற்குள் பெண்மணிகள் இருவரும் கூண்டைவிட்டு மெதுவாகக் கீழே இறங்கி ராஜபாட்டைக்கு வந்து சேர்ந்துவிட் டனர். சற்று முன் நெடுதூரத்தில் வந்துகொண்டிருந்த வழிப் போக்கர் களும் அங்கே வந்து கூடிவிட்டனர். காலின் சுளுக்கினால் எழுந்திருக்க மாட்டாமல் கிடந்த வண்டிக்கார மினியனும் தட்டுத் தடுமாறி நகர்ந்தபடியே அங்கே வந்து சேர்ந்தான். மடந்தையர் இருவரும் தங்களுக்கு நேர்ந்த பேராபத்தினால் மிகுந்த திகிலும் நடுக்கமும் அடைந்து வண்டியின் கூண்டிலும் ஒருவர் மேல் ஒருவரும் வீழ்ந்து மொத்துண்டு, சிற்சில இடங்களில் சிறாய்க்கப்பெற்றவர்களாய்க் கடைசியில் தெய்வாதீனமாகத் தப்பிப் பிழைத்தனர் ஆகையால், அவர்களது மெல்லிய சரீரம் தென்றல் காற்றில் அசையும் மாந்தளிர் போலப் படபடத்து நடுங்கியது. குழப்பமும் பேரச்ச மும் அப்போதும் அவரது மனதைவிட்டு அகலாமலே இருந்தன. அன்னிய மனிதருக்கு எதிரில் தமக்கு அப்படிப்பட்ட கேவல மான இழிவும் அபாயமும் நேர்ந்தது பற்றி அவர்கள் இருவரும் சகிக்க வொண்ணாத வெட்கமும் நாணமும் அடைந்து தத்தளித் தனர். ஆனாலும், தங்களுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்த மகாது பாவனாகிய அந்த யெளவனப் புருஷனது முகத்தை அடிக்கடி பார்த்து அவனது வீரச் செயலைக் கண்டு அவர்கள் கரைகடந்த களிப்பும் நன்றியறிதலும் தோற்றுவித்து அவரது விஷயத்தில் அவர்கள் அபரிமிதமான பிரியத்தைக்கொண்டு விட்டார்கள் என்பதை அவர்களது முகப்பார்வையானது ஆயிரம் நாக்குகள் கொண்டு வெளியிட்டு அவனை ஸ்தோத்திரம் செய்வது போல இருந்தது. அப்போது நமது யெளவனப் புருஷனும், தான் செய்த அரிய பெரிய செய்கையைப் பற்றித் தனக்குத்தானே ஆநந்தமும் உற்சாகமும் அடைந்தவனாய், அவர்களுக்கு இன்னமும் தன்னாலியன்ற எப்படிப்பட்ட உதவியையும் செய்யவேண்டும் என்ற ஒரு பதைபதைப்பையும் ஆவேசத்தையும் கொண்டவ னாய், வண்டிக்கார மினியனை நோக்கி, "அடே! வண்டிக்காரா!