பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

செளந்தர கோகிலம்



அம்மாமார்களுக்கு அதிகமாக அடிபட்டதா என்று விசாரி, இந்த வண்டி இனிமேல் உபயோகப்படாது. நான் திருவல்லிக் கேணிக்குப் போய் ஒரு வண்டி பார்த்து அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்று நிரம்பவும் அன்பாகவும் உருக்கமாகவும் கூற, அந்த வார்த்தையைக் கேட்ட பெண்மணிகள், அவனது நற்குணத்தையும் உபகாரசிந்தையையும் பற்றி ஆநந்தபரவசம் அடைந்தவர்களாயினர். உடனே கோகிலாம்பாள் மினியனை நோக்கி மிருதுவான இனிய குரலாகப் பேசத்தொடங்கி, "அடே மினியா வண்டி சாய்ந்தவுடனே நாங்கள் கூண்டிற்குள்ளே தொற்றிக்கொண்டு விட்டோம், தெய்வச்செயலாக, எங்களுக்கு அடிபடவில்லை. நீ நொண்டி நொண்டி நடக்கிறாயே, உன் கால் எப்படி இருக்கிறது? அவர்களுடைய உயிரையும் மதியாமல் இந்த அபாயத்தில் வந்து பாய்ந்து எங்களுடைய உயிரை யெல்லாம் காப்பாற்றிய இந்த ஐயாவுக்கு இன்னமும் சிரமம் கொடுத்து வண்டி கொண்டுவருவதற்காக அவர்களைத் திருவல்லிக்கேணிக்கு அனுப்ப எங்களுக்கு இஷ்டமில்லை. இப்படியே நடந்து கொஞ்சதுரம் போனால், வழியில் எத்தனையோ வண்டிகள் வரும். அதில் ஏறிக்கொண்டு போய் விடலாம். இந்த வண்டியையும் குதிரையையும் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே இரு நாங்கள் போப் ஆள்களிடத்தில் வேறே இரண்டு சக்கரங்களையும் இன்னொரு குதிரையையும் கொடுத்தனுப்புகிறோம்; எல்லோருமாக வண்டியைக் கொண்டு வந்து சேருங்கள். குதிரையின் காவிலிருந்து இரத்தம் ஒழுகுகிறது; உன்னுடைய மேல் துணியைக் கிழித்து, லாந்தரிலிருக்கும் தேங்காயெண்ணெயில் நனைத்து புண்ணின் மேல் நன்றாகக் கட்டு” என்று கிள்ளை மொழிவது போலக் கூறினாள். அதைக் கேட்ட நமது யெளவனப் புருஷன் மினியனைப் பார்த்து, 'அடே! மினியா இப்படியே நடந்து போனால், இன்னம் ஒன்றரை மயில் தூரம் போனாலன்றி வண்டி அகப்படாது. அவ்வளவு தூரம் இவர்கள் நடப்பதற்குள், ராத்திரி வேளை ஆகிவிடும். சாயுங்கால வேளைகளில் சோல்ஜர் முதலிய துஷ்டர்கள் இங்கே வந்து நடமாடுவார்கள். ஆகையால் அப்படிச் செய்வது அபாயகரமான காரியம். கால்மணி நேரம் இவ்விடத் திலேயே இருங்கள். நான் ஒரே ஒட்டமாக ஒடி இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்' என்று அன்பாக வற்புறுத்திக்