பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 47

யாட்களையே ஏவுவர் ஆகையாலும், தான் உள்ளே போவதும் அவ்விடத்தில் நிற்பதும் பயனற்ற காரியம் என்பது அவனுக்கு நன்றாகப்பட்டது. ஒரு மனிதருக்கு ஒர் அபாயகாலத்தில், இன்னொருவர் உபகாரம் செய்தால், அவ்வளவோடு பின்னவர் போகவேண்டுமேயன்றி, முன்னவரிடத்தில் சன்மானத்தையாவது புகழ்ச்சியையாவது எதிர்ப்பார்ப்பது அதமகுணம் என்பதை நமது யெளவனப் புருஷன் நன்றாக உணர்ந்தவனேயானாலும், கோகி லாம்பாளின் மீது அவனது அன்பு அதரங்கள் எல்லாம் சென்று லயித்திருந்தமையால், அவன் மனக்கலக்கம் அடைந்து தடுமாறித் தத்தளித்தான்.

அவ்வாறு அரைக்கால் நாழிகை நேரம் கழிந்தது. அந்த வாசலில் காவல் காக்கும் வேலைக்காரன் தோட்டத்திற்குள் ளிருந்து திரும்பி அங்கே வந்து சேர்ந்தான். இரும்புக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்ததையும், உள் பக்கத்தில் ஒரு புருஷன் நின்றதையும் அவன் கண்டு மிகுந்த சந்தேகம் கொண்டு, “யாரைய்யா அது? ஏனைய்யா கதவைத் திறந்தாய்?’ என்று அதட்டிக் கேட்க, நமது யெளவனப் புருஷன் அப்போதே தனது நல்லுணர்வைப் பெற்றவனாய், 'வித்தியாசமான மனிதர் ஒருவருமில்லை. நான்தான் பக்கத்து வீட்டிலிருப்பவன். இந்த விட்டுப் பெண்களோடு நான் குதிரை வண்டியில் உட்கார்ந்து கொண்டு வந்தேன். குதிரை வண்டி இப்போதுதான் உள்ளே போயிற்று. நான் வீட்டுக்குப் போகிறேன். வேண்டுமானால் நீ கதவுகளை மூடிக்கொள்' என்று கூறியவண்ணம் மெல்ல ராஜபாட்டைக்கு நழுவினான்.

அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட காவற்காரன் நிரம் பவும் திமிராகவும், எடுப்பாகவும் பேசத் தொடங்கி, "ஒகோ! அப்படியா! இந்த வீட்டுப் பெண்கள் உன்னோடு குதிரை வண்டியில உட்கார்ந்து கொண்டு வந்தார்களோ என்ன, கதை பண்ணுகிறாயோ? தென்ன மரத்தில் கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க ஏறின கதையாக இருக்கிறதே! பாதையோடு போகிற நாய்களெல்லாம், மனிதன் கொஞ்சம் அயர்ந்தால், இப்படி வந்து கமான் மேலே இருக்கும் பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டு போவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார்களே!