பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

செளந்தர கோகிலம்



வந்து விட்டேன். அவர்களுடைய பங்களாவுக்குள் எனக்கு என்ன வேலையிருக்கிறது. அழைக்காத இடத்துக்கு அநாவசிய மாய்ப் போக எனக்கென்ன பைத்தியமா?" என்றான். -

உடனே கற்பகவல்லியம்மாள் ஒருவாறு திருப்தியடைந்த வளாய், "சரி, அதுதான் மரியாதைக்கு அழகு. நீ நல்ல காரியம் செய்தாய் அதிருக்கட்டும்; நேரமாகிறது: எழுந்து சாப்பிடவா", என்று கூறினாள்.

அதைக்கேட்ட கண்ணபிரான், 'இன்றைக்கு, என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பசியுண்டாகவில்லை; வயிறு மந்தமாக இருக்கிறது. இன்று ராத்திரி சாப்பிடாமல் லங்கணம் போட்டால்தான், நாளைக்கு உடம்பு வழிக்கு வரும்போலிருக் கிறது. ஆகையால் எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் இப்ப டியே போய்ப் படுத்துக் கொள்ளுகிறேன். நீங்கள் சாப்பிடலாம்" என்று நயமாகக் கூறினான்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த கவலைக் கொண்டு, 'ஏன் பசியில்லை? காலையில் நீ அப்படி விசேஷமாக எதையும் சாப்பிடவில்லையே! பகலில் இரண்டாவது வேளைக் கும் கொஞ்சமாகத் தானே ஆகாரம் கட்டிக் கொடுத்திருந்தேன். இப்படி சுத்தமாக வயிறு மந்திக்கும்படி நீ எதைச் சாப்பிட்டாய், இப்போது பசிக்காவிட்டால் இன்னம் கொஞ்சநேரம் பொறுத் துச் சாப்பிட்டால், சரியாய்ப் போகிறது; ஒரு சோடா புட்டி வேண்டுமானால் வரவழைக்கட்டுமா? அதைச் சாப்பிட்டால் உடனே பசியெடுக்கும்” என்று மிகுந்த கவலையும் துன்பமும் அடைந்தவளாகக் கூறினாள்.

கண்ணபிரான், "இல்லை இல்லை. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். பசி இல்லாதபோது சோற்றை வைத்துத் திணித்தால் தலைவலி போகத் திருகுவலி வந்த கதையாய், ஒன்று கிடக்க இன்னொரு துன்பம் வந்து விளையும்; ஆகையால் சும்மா படுப்பதே நல்லது. நாளைக் காலையில் உடம்பும் கலகலப்பாக இருக்கும். ஒரு வியாதியும் அணுகாது” என்றான்.

கற்பகவல்லியம்மாள், 'மனிதன் எதை நிறுத்தினாலும் ராத்திரிச் சாப்பாட்டை மாத்திரம் நிறுத்தக்கூடாது; நாளைக்கு