பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 63

பெருத்த வெள்ளித் தாம்பாளங்கள் நிறைய ஏதோ சாமான்களை வைத்து நிரப்பி, அவற்றைப் பட்டு உருமாலைகளால் மூடி எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து வந்தனர். சிறிய தாமரை போன்ற குஞ்சங்களைக் கையில் வைத்திருந்த இரண்டு காசா ரிகள் அடங்கி ஒடுங்கிப் பணிவாக வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

கற்பகவல்லியம்மாள் முன்னும், பூஞ்சோலையம்மாளும் தாதிகளும் பின்னுமாக உள்ளே சென்று தாழ்வாரத்தில் திரும்ப, அப்போது முற்றத்தில் இறங்கி, ஒரு பக்கமாக ஒதுங்கி நின்ற கண்ணபிரான் அவர்களைக் கண்டு ஒருவிதக் கிலேசமடைந்த வனாய்ப் புன்னகை செய்து, "வாருங்கள்' என்று கூறி, உபசரித்த பின் ஒரு பக்கமாக நழுவி மறைந்து நின்றான்.

கண்ணபிரானைக் கண்டதனாலும், அவன் உபசரித்ததைக் கேட்டதனாலும் மிகுந்த லஜ்ஜையடைந்து நாணித் தலைகுனிந்த பூஞ்சோலையம்மாள் நேராகக் கூடத்திற்குச் சென்றாள்.

அப்படிப்பட்ட மகா உயர்வான சீமாட்டியைத் தான் எப்படி உபசரித்து மரியாதை செய்வது என்பதை உணர மாட் டாமல் நிரம்பவும் தத்தளித்த கற்பகவல்லியம்மாள் அதுகாறும் கண்ணபிரான் உட்கார்ந்திருந்த சாய்மான நாற்காலியைச் சுட்டிக் காட்டி அதில் உட்கார்ந்துகொள்ளும்படி உபசரிக்க, பூஞ் சோலையம்மாள், 'பரவாயில்லை; பரவாயில்லை; எங்கே உட்கார்ந்தாலென்ன!. இப்படித்தான் உட்காருகிறேன்' என்று கூறிக்கொண்டு அங்கே தொங்கிய ஊஞ்சற் பலகையின் மேல் உட்கார்ந்தவண்ணம், "நீங்களும் உட்காருங்கள். நீங்கள் நிற்க, நான் மாத்திரம் உட்காருவதா' என்று பதில் உபசாரம் செய்ய, கற்பகவல்லியம்மாள் அதை மறுக்க மாட்டாதவளாய் அங்கே கிடந்த ஒரு விசிப்பலகையின்மேல் உட்கார்ந்து கொண்டாள்.

தாதிகள் இருவரும் வெள்ளித் தட்டுகளை மூடியபடியே, கற்பகவல்லியம்மாள் இருந்த விசிப் பலகையில் விஸ்தாரமாக மிகுந்திருந்த இடத்தில் ஒருபக்கமாக வைத்துவிட்டு மரியாதை யாக ஒருபுறத்தில் ஒதுங்கி நின்றனர். கற்பகவல்லியம்மாள் தொடக்கத்தில் தனது மகன் அவர்களது விஷயத்தில் ஏதோ தவறு செய்தது பற்றி அந்தச் சீமாட்டி ஏதோ குறைகூற வந்திருப்பதாக