பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 65

வரும் என்னுடைய குழந்தைகள் இரண்டும் போன இடத்தில் புல் முளைத்துப் போயிருக்கும்! நானும் இப்போது தங்களைத் தரிசிப்பதற்குப் பதிலாக, எமனைத் தரிசித்துக் கொண்டிருப்பேன். ஆகா! நேற்றையதினம் தங்களுடைய குழந்தை செய்த உதவி சாதாரணமானதல்ல; அவரே எங்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்த வள்ளல்; அவராலேதான் எங்களுடைய குடும்ப விளக்கு அணையாமல் இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பரம உபகாரியைப் பெற்றெடுத்த புண்ணியவதி யான தங்களைக் கண்டு தரிசித்து எங்களுடைய நன்றியறி தலையும், நாங்கள் தங்களுக்கு எவ்வளவு அதிகமாகக் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துவிட்டு, இன்றைய தினம் தங்கள் பொருட்டாக நாங்கள் நடத்த உத்தேசித்திருக்கும் விருந்துக்குத் தங்களை அழைத்துக் கொண்டு போவதற்குமே நான் வந்தது” என்று கூறியவண்ணம், தாதிகளை நோக்கிக் கண் சிமிட்டி ஏதோ சைகை செய்ய, அவர்கள் அந்தக் குறிப்பை அறிந்துகொண்டு, மெல்ல விசிப்பலகையண்டை வந்து தாம் பாளங்களின்மேல் மூடப்பட்டிருந்த உருமாலைகளை விலக்கி, அவைகளை கற்பகவல்லியம்மாளினண்டையில் மரியாதையாக நகர்த்தி வைத்தனர். -

கற்பகவல்லியம்மாள் தட்டுகளை நோக்கி மிகுந்த பிரமிப்படைந்தாள். ஜரிகைகள் தகதகவென்று மின்னிய பட்டு உருமாலைகளும், ஜரிகை வஸ்திரங்களும், எழுநூறு எண்ணுாறு ரூபாய் பெறத்தக்க பட்டுச் சேலைகள், வைர மோதிரங்கள், வைரக் கடுக்கன்கள் முதலிய விலையுயர்ந்த பொருள்களும், மல் கோவா, சீமை இலந்தை, குடகு கமலா செவ்வாழை முதலிய பழ வகைகளும், தாம்பூலாதி சாமான்களும், வெள்ளியினாலான கிண்ணமும், பலவகைப்பட்ட சில்லரைச் சாமான்களும் நிறைந் திருந்த அந்த இரண்டு வெள்ளித் தட்டுகளையும் மாறி மாறி உற்று நோக்கிய கற்பகவல்லியம்மாள் தனது கண்களையே நம் பாமல் இரண்டொரு நிமிஷ நேரம் திகைத்துத் தத்தளித்தாள். அபாரமான மாளிகைகளையும், அபரிமிதமான நவரத்னக் குவியல்களையும் பெற்ற பூஞ்சோலை அம்மாளை நோக்கி, குசேலன்போல நிரம்பவும் ஏழ்மை நிலையிலிருந்த அந்த அம்மாள் கரைகடந்த பிரமிப்பும் வியப்புமடைந்து கிலேசத் செ.கோ.:-6 -