பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

செளந்தர கோகிலம்



தாரோ, அதுபோல நாங்களும் எங்களுடைய கடமையையே செலுத்துகிறோம்; சுவாமி கோவிலுக்கு நாம் போகிறோம்; வெறுங்கையோடே போகிறோமா? சகலமான அண்டபிண்ட சராசரங்களையும் சிருஷ்டித்து, நம்மையெல்லாம் படைத்து, நமக்கு வேண்டிய ஆகாராதிகளையெல்லாம் நிருமாணித்து வைத்திருக்கும் சர்வேசுவரனை நாம் பூஜிக்கையில் தேங்காய்ப் பழம் முதலிய நிவேதனங்களை வைத்து நாம் நமது பக்தியைக் காட்டுகிறோம். உலகத்திலுள்ள எல்லாத் தேங்காய்களையும் பழங்களையும் சிருஷ்டித்த ஈசுவரனுக்கு, நாம் ஒரு தேங்கா யையும் இரண்டு பழங்களையும் நிவேதனம் செய்யும் விஷ யத்தை நாம் ஆழ்ந்து நினைப்போமானால், அது கடவுளைப் புரளி செய்வது போலவும், அவருடைய சர்வ வல்லமைத் தன் மையை இழிவுபடுத்துவதுபோலவும் ஆகும். எப்படி என்றால், கேவலம் ஒரு தேங்காயையும் இரண்டு வாழைப் பழங்களையும் நாம் கொடுக்க மாட்டோமா என்று தெய்வம் எதிர்பார்த்துப் பட்டினி கிடப்பது போலவும், நாம் கடவுளுக்கு உதவி செய்வது போலவும் அந்த விஷயம் தோன்றுகிறதேயென்று, நாம் அந்த மரியாதையை நிறுத்தலாமா? உலகத்தையெல்லாம் படைத்த கடவுளுக்கு அந்த உலகத்திலும் பெரிய வஸ்துவைத் தேடிப் பிடித்தல்லவா நாம் நிவேதனம் செய்ய வேண்டும்? அது நம்மால் ஆகக்கூடிய காரியமா? அப்படித்தான் செய்யவேண்டுமென்ற கட்டாயம் ஏற்படுமானால், நாம் ஒன்றையும் செய்யாமல் சும்மா இருந்துவிட வேண்டியதாகத்தானே முடியும்; அப்படி இருந் தாலும், நாம் நம்முடைய கடமையைச் செய்தே தீரவேண்டும். கடவுளுடைய சிருஷ்டி அபாரமாக இருந்தாலும், அதில் ஒவ் வொரு மனிதனுக்கும் கிடைப்பது ஒர் அணுவாதலால், அந்த அணுவிலும் ஒர் அணுவைத்தான் நாம் ஈசுவரனுக்கு நிவேதனம் செய்யச் சாத்தியப்படும். ஈசுவரனுடைய பசியை நிவர்த்திப்ப தற்காக நாம் நிவேதனம் செய்வதாக இருந்தால், அவருக்குத் தகுந்தபடி அண்டபிண்ட பிரம்மாண்டங்களையெல்லாம் உருண்டை உருண்டையாக உருட்டி உண்பிக்க வேண்டும். அவருக்கு நம்மைப்போலப் பசி இருக்குமோ என்பதே முதலில் சந்தேகம். அப்படிப் பசி இருந்தாலும், அதை நிவர்த்தித்துக் கொள்ளும் திறமையுடையவர் அவரேயன்றி வேறல்ல. நாம்