பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 75

களெல்லாம் எங்களைப்போன்ற சாதாரண மனிதர்களுடைய வீட்டுக்கு வருவதும், எங்களுக்கு இவ்வளவு தூரம் உபசாரம் செய்வதும் அபூர்வமான விஷயம். ஆகையால், தங்களுடைய பிரியப்படியே நாங்கள் வருகிறோம். ஆனால் எங்களுக்கு இன்னம் ஸ்நானம் முதலிய எந்தக் காரியமும் ஆகவில்லை; அவைகளையெல்லாம் முடித்துக் கொண்டு சரியாகப் பத்து மணிக்கு நாங்கள் தங்களுடைய பங்களாவுக்கு வந்து சேர்ந்து விடுகிறோம். பையனுடைய ஆபீசுக்கும் ரஜாக் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்; அதையும் இங்கேயே எழுதி பக்கத்துத் தெருவிலிருந்து அதே ஆபீசுக்குப் போகும் இன்னொரு குமாஸ் தாவிடத்தில் கொடுத்தனுப்பி விட்டு வருகிறோம்” என்றாள்.

அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த களிப்பும் பூரிப்புமடைந்தவளாய், "சரி, அவ்வளவாகிலும் ஒப்புக்கொண்டீர் களே! அதுவே போதுமானது. சரியாக ஒன்பதரை மணிக்கு நாங் கள் எங்களுடைய பெட்டி வண்டியை அனுப்பி வைக்கிறோம்; தாங்களிருவரும் அதிலேயே வந்து விடலாம்; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். அவசியம் தாங்கள் வர வேண்டும்' என்று அன்பாக வற்புறுத்திக் கூறியவண்ணம் எழுந்து விடை பெற்றுக் கொண்டு, தனது வேலைக்காரிகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் போக, கற்பகவல்லியம்மாள் வாசல் வரையில் சென்று அவர்கள் வண்டியில் ஏறிப் போன வரையில் நின்று உபசார வார்த்தைகள் கூறி வழியனுப்பிவிட்டு வாசற் கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தாள்.

அதற்குள், காமரா உலகை விட்டு வெளியில் வந்த கண்ணபிரான் மிகுந்த மகிழ்ச்சியும் மனவெழுச்சியும் கொண்ட வனாய், நேராக விசிப்பலகைக்குப் போய் அதன் மேல் இரண்டு பெருத்த வெள்ளித் தட்டுகளில் விலையுயர்ந்த சேலை, வஸ்திரங் கள், வைரக்கடுக்கன், வைர மோதிரம் முதலிய ஆடை ஆபர ணங்களும், நல்ல நல்ல பழ தினுசுளும் ஏராளமாக இருந்ததைக் கண்டு அளவுகடந்த குதூகலமும் வியப்புமடைந்து, 'அம்மா! இதென்ன பெருத்த கலியாணத்தின் வரிசை போல இருக்கிறதே! நான் அப்படி என்ன பிரமாதமான காரியத்தைச் செய்து விட் டேன்! என்ன மரியாதை என்ன மரியாதை அடடா பணக்