பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 செளந்தர கோகிலம் திவான், 'இவர்கள் உண்மையை உன்னிடம் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அல்லது, இவர்கள் ஏதாவது சொன்னாலும் உண்மையை மறைத்து ஒன்று கிடக்க வேறொன்று சொல்லி வைப்பார்கள். நீ போய்க் கேட்க வேண்டாம் வா. நாம் ஊருக்குள் போவோம். அங்கே நான் தந்திரமாக விசாரித்து உண்மையை அறிந்துகொண்டு வருகிறேன்” என்று கூறினார். அதற்கு அவரது மனையாட்டி உடனே இணங்க, இருவரும் அவ்விடத்தை விட்டு, சுமார் நூறு கஜதுாரத்திற்கு அப்பால் ராஜபாட்டையில் இருந்த தமது மோட்டார் வண்டியை நோக்கி நடக்கத்தொடங்கினர். அப்போது அந்த ராஜபாட்டையில் ஜனங்கள் பெருத்த கும்பலாக நிறைத்து போய்க்கொண்டிருந்தது அவர்களது திருஷ்டியில் பட்டது. அவர்களிருவரும் திடுக்கிட்டு அந்த ஜனக் கும்பலை உற்று நோக்கினர். அவர்கள் எல்லோருக் கும் முன்னால் நான்கு போலீஸ் ஜெவான்கள் கத்தி துப்பாக்கி களுடன் நடந்தனர். அவர்களுக்கிடையில் ஒரு யெளவனப் புருஷன் கைவிலங்கு கால்விலங்குகள் பூண்டவனாய்க் காணப் பட்டான். அவனை ஜெவான்கள் அந்த ஊரிலிருந்து திருவனந்த புரம் இருந்த திக்கில் நடத்தி அழைத்துக் கொண்டு போனதாகத் தெரிந்தது. அவர்களுக்குச் சுமார் இருபது கஜத்திற்குப் பின்னால் அந்த ஊர் ஆண் பிள்ளைகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு பின் தொடர்ந்து சென்றதும் தெரிந்தது; அவர்களுக்குப் பின்னால், சுமார் இருபது, அல்லது, இருபத்திரண்டு வயதடைந்த ஒரு யெளவனப் பெண், ஐயோ! அப்பா வென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தலைவிரி கோலமாய்த் தொடர்ந்து செல்ல முயல்வதுமாய் இருக்க, வேறு இரண்டு மூன்று ஸ்திரீகள் அவளைப் பிடித்துக்கொண்டு, அவளுக்குப் பலவிதமான ஆறுதல் மொழிகள் கூறி, அவளைத் திருப்பி ஊருக்கு அழைத்துக் கொண்டு போகமுயன்று கொண்டிருந்தனர். அவ்வாறு அலறிப்புடைத்து விழுந்து நைந்து கலங்கியழுத வண்ணம் ஜெவான்களைத் தொடர்ந்து வந்த யெளவன ஸ்திரியைக் கண்ட ஜனங்களெல்லோரும் கட்டிலடங்கா மனக் கலக்கமும் பச்சாதாபமும் அடைந்து, "ஐயோ பாவம்! ஐயோ பாவம்! இந்தப் பெண்ணின் கொடுமையைப் பார்க்கச்