பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 செளந்தர கோகிலம் படித்தவர்களும் காசுக்கு நூறு, பீசுக்குப் பத்தாகக் கிடந்து இறைபடுகிறார்கள். அவர்கள் உத்தியோகத்துக்குப் போனாலோ, அநேகமாய் குமாஸ்தா வேலைதான் கிடைக்கிறது. அதிலிருந்து முப்பது நாற்பது சம்பளம் கிடைத்தால், அது அன்றாடம் வயிற்றை வளர்ப்பதற்குக்கூடப் போதுமானதாய் இருக்கிற தில்லை. குடும்பத்தில் யாராவது நோயாய் விழுந்துவிட்டாலும் சரி, ஊருக்குப் போகவேண்டு மென்றாலும் சரி, வேஷ்டி புடவைகள் நகைகள் வாங்க வேண்டுமென்றாலும் சரி, அவன் கடன் வாங்கவேண்டும். அல்லது, பழைய சொத்துக்களை அடமானம் வைக்கவேண்டும். அவனுக்கு நாலைந்து குழந்தைகள் பிறந்துவிடும் பகத்திலோ அவர்களுக்குக் கலியாணம் முதலியவைகளை நடத்த ஆயிரம் இரண்டாயிரம் வேண்டும். ஆனால், அவன் திருடித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும். அல்லது பெண்களைக் கன்னி கழியாமலேயே வைத்திருக்க வேண்டும். இந்த அழகான உத்தியோகங்களுக்கோ போட்டியும் பொறாமையும் கணக்கில்லாமல் ஏற்படுகின்றன. இந்த உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்படும் மாறுதலோ மகா விநோதம். லாகூரிலிருப்பவர் இரங்கூனுக்கும், கல்கத்தாவில் இருப்பவர் கன்னியாகுமாரி முனைக்குமாய் மாற்றப்படுகிறார்கள். அப்படி மாற்றப்படுகிறவர்கள் பெரியவர்களுடைய துணையின்றி, தமது யெளவன மனைவிகளுடன் போவதும், குடும்ப வாழ்க்கை யிலும், குழந்தைகளைப்பெற்றுப் பாதுகாப்பதிலும், ஆரோக்கிய மான ஆகார முறைகளைக் கடைபிடிப்பதிலும் கொஞ்சமும் அநுபவமற்ற அந்த யெளவன மனைவிகள் தனியாக தூர தேசங்களுக்குப் போய்த் தவிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டன. யார் செத்தாலும், யார் வாழ்ந்தாலும் புருஷன் மணிக் கிரப்படி தன் அலுவலுக்குப் போய்ச் சேரவேண்டும். தந்தி கொடுத்தால்கூட சில சமயங்களில் ரஜா கிடைக்கிறதில்லை. இங்கிலீஷ் படிக்கிறவன் ஜாதியாசாரம் குலாசாரம் முதலிய வற்றையெல்லாம் இழந்து தான் என்கிற மமதையில் ஆழ்ந்து, இங்கிலீஷ் காரரிலும் சேராமல், இந்தியரிலும் சேராமல் வெளவால்கள் போல அந்தரத்தில் தொங்கிக்கொண்டு எவருக்கும் உதவாத ஒரு தனி உலகத்தில் இருந்துவருகிறார்கள். ஆயிரம் பதினாயிரம் செலவிட்டு பி.ஏ. எம்.ஏ. பரிட்சையில்