பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 151 தேறுகிறார்களே, அவர்கள் திடசாலியாய் நீடித்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையாவது உண்டா? அதிகமாய்ப் படிக்காத வர்களுடைய தேகக் கருவிகள் திடகாத்திரமாக இருக்கின்றன. இராப் பகல் உழைத்து உழைத்துப் படித்தாலும் மூளைக்கு அதிக வேலை கொடுத்து தேகத்தை நாற்காலியை விட்டு அசைக்காமல் போட்டிருப்பதாலும், உடம்பின் கருவிகள் வெகு சீக்கிரம் மலினமடைந்து போகின்றன. வயிற்று நோய், அஜீரணம், குன்மம், நீர் ரோகம் முதலிய வியாதிகள் வந்து விடுகின்றன. சீக்கிரத்தில் நரம்புகள் கெட்டுத் தளர்ந்து போகின்றன. திடீரென்று இருதய ஒட்டம் நிற்பதால் பிராணன் போய் விடுகிறது. ஏராளமான திரவியத்தையும், உழைப்பையும், உயிரையும் செலவிட்டுச் சம்பாதித்த பி.ஏ.பட்டமும், உத்தியோகமும் அவன் மண்டையோடு ஒழிந்துபோகின்றன. மனைவி மக்களுக்கு ஒடுகள் தான் மிஞ்சுகின்றன. ஆகையால், நமக்குப் படித்தவனும் வேண்டாம், சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறவனும் வேண்டாம். ஏராளமான பூஸ்திதியும் பணமும் வைத்திருப்பதோடு, சாதாரணமான வியவகார ஞானமும் நற்குண நல்லொழுக்கமும் உடையவனாய் இருப்பதே போது மானது. அவன் யெளவன புருஷனாயிருப்பது கூட அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை. கொஞ்சம் வயசு முதிர்ச்சி யடைந்து, உலக அநுபமும் உடையவனாய் இருப்பானாகில், அவனே சிலாக்கியமான மாப்பிள்ளை. ஏனென்றால், வயசான மனிதன் யெளவனப் பிராயமுடைய தன் மனைவியை அத்யந்த பிரமையோடும் ஆசையோடும் நடத்துவான்; அவள் காலாலிடும் வேலையைச் சிரசால் செய்வான்; அவளை வையமாட்டான்; அடிக்க மாட்டான்! அவளுக்கு வேறு எவ்விதமான உடத்திரவமும் கொடுக்க மாட்டான். அவனுடைய புத்தி அன்னிய ஸ்திரீகளிடத்திலும் நாட்டங் கொள்ளாது. ஆகையால், அவன் உறுதியான ஏகபத்ணி விரதம்பூண்டு நடப்பான். அவன் அயல் மாதரை விரும்பினாலும், அவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள். ஒருவேளை தன் யெளவன மனைவி ஏதாவது தவறு செய்துவிட்டாலும், அவன் பொறுத்துக் கொள்வதோடு, அதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் மாட்டான். தன் பெண் சாதி உழைத்து வேலை செய்வதைக்