பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 செளந்தர கோகிலம் வென்று அஞ்சிக் கலங்கி, "யானைக்கும் அடி சறுக்கும் என்பார் களே. அப்படி இருக்க, கேவலம் பேதையாகிய நான் தவறு செய்திருக்க மாட்டேனென்று நான் எப்படித் துணிந்து மறுக்கமுடியும். நான் அறிந்து எந்தத் தவறையும் செய்பவளன்று; அறியாமல் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால், தாங்கள் தான் அதை எடுத்துக் காட்டித் திருத்த வேண்டும்” என்று நயமாகவும் பணிவாகவும் குழந்தைபோல மழலையாகவும் மறுமொழி கூறினாள். - - திவான் முதலியார், 'நான் இல்லாத காலத்தில் நீ சந்தோஷமே அடைகிறதில்லையென்றும், நான் இல்லாததைப் பற்றி ஏக்கங் கொண்டிருப்பதென்றும் சொல்லுகிறாயே! நம்முடைய ராஜாபகதூர் இருக்கிறானே. அவனுடைய அழகை யும், புத்திசாலித் தனத்தையும், நற்குண நல்லொழுக்கத்தையும் கண்டு எல்லோரும் ஆநந்தமடைந்து, அவனை நிரம்பவும் மெய்ச்சி அபாரமாகப் புகழுகிறார்களே. அன்னியர்களே அப்படி இருக்க, பெற்ற தாயாகிய நீ உன் குழந்தையைக் கண்டு எவ்வளவு அதிகமாக ஆநந்தமடைய வேண்டும். நான் இல்லாத காலத்தில் அவன் உன்னோடு கூட இருப்பதில்லையா? அப்போது நீ சந்தோஷமடைவதில்லையா?” என்றார். அதைக் கேட்ட பெண்மணி நிரம்பவும் மரியாதையாகவும் பணிவாகவும் அடக்கமாகவும் மிருதுவான குரலிலும் பேசத்தொடங்கி, ‘பையனுக்குப் பன்னிரண்டு வயசு நடந்து கொண்டிருக்கிறது. அவனைத் தாங்கள் குழந்தை என்று மதிக்கலாம்; நான் அப்படி மதிக்கலாமா? என்னைப்போன்ற தாய்மார் குழந்தைகளைக் கண்டு சந்தோஷப்படும் பருவம் அநேகமாய் அவர்களுடைய மழலைச்சொல் திருந்துகிற வரையில் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம். அதுவரையில் அவர்களுடைய மழலைச் சொற்களைக் கேட்பதனாலும், அவர்களுடைய மூடத்தனமான விளையாட்டுகளைக் காண்பதனாலும், அல்லது, அவர்களுடைய அமிதமான புத்திசாலித்தனத்தையோ, அல்லது அழகையோ, அல்லது நற்குண நல்லொழுக்கத்தையோ காண்பதனாலும் தாய்மாருக்கு ஆநந்தமும் புளகாங்கிதமும் ஏற்படுவது சகஜமே. அதற்குமேல் அவர்களுடைய காரியங்களைக் கண்டு தாய்மார்