பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο செளந்தர கோகிலம் சேலைகள் யாவும் பெட்டிக்குள் போய் மறைந்துகொண்டன. அவள் ஆறு ஏழு ரூபாய் விலை பெற்ற ஐந்தாறு காங்குப் புடவைகளைத் தருவித்து வைத்துக்கொண்ட தன்றி, அவற்றுள் ஒன்றையெடுத்து அணிந்துகொண்டாள். அந்த அணங்கின் மேனியில் நிறைந்து ஜ்வலித்த வைர ஒலைகள், வைர மூக்குத் திருகுகள், வைரம் இழைத்த ஒட்டியாணம், வைர சரங்கள், வைர வளையல்கள் முதலிய யாவும் இரும்புப் பெட்டிக்குள் நுழைந்து கொண்டன. செவியில் சிவப்புக்கல் ஒலைகளும், கைகளில் இரண்டிரண்டு தங்க வளையல்களும், கழுத்தில் தாலிச்சரடுமே காணப்பட்டன. அவ்வாறு தனக்குத்தானே ஏழ்மை நிலைமையை வகித்துக் கொண்ட ஸ்திரீ ரத்னமான காந்திமதியம்மாள் தனது கணவரிடம் சென்று அவருக்கெதிரில் மண்டியிட்டு பயபக்தி விநயத்தோடு நமஸ்கரித்தெழுந்து வணக்கமாகக் கைகுவித்து நின்றபடி ஏதோ வார்த்தைகள் கூற எத்தனித்தாள். ஆனால், அவளது வாய் குழறிப் போய்விட்டது. மெல்லிய காற்றிலசையும் மாந்தளிர்போல அந்த மடவன்னத் தின் வாயிதழ்கள் நடுங்கின. கண்களிலிருந்து கண்ணிர் குபிரென்று பொங்கி மாலை மாலையாக வழியத் தொடங்கியது. சிரம் கீழே கவிழ்ந்தது. தான் அவரது கட்டளையைச் சிரமேற் கொண்டு அவரை விட்டுப் பிரிந்து போவதற்கு இணங்கினாள். ஆனாலும், தான் தனது உயிரை விட்டுப் பிரிந்து போவதாகவும், அந்தப் பிரிவாற்றாமை அப்போது முதலே தன்னை வதைக்கத் தொடங்கி விட்டமையால், தான் அதிக காலம் அவரை விட்டுப்பிரிந்திருந்தால் தனது உயிர் நில்லாதெனவும் அவள் வாய்விட்டுக் கூறுவதைவிட ஆயிரமடங்கு தெளிவாக அவளது பரிதாபகரமான தோற்றம் அவளது மனநிலைமையை எடுத்துக் காட்டியது. அதைக் காண திவான் முதலியாரும் மிகுந்த மனக்கலக்கமும் சஞ்சலமும் அடைந்தவராய்த் தமது அரிய மனையாட்டியைத் தமக்கருகில் இழுத்து வாஞ்சையோடு ஆலிங்கனஞ்செய்து, 'உங்களைவிட்டுப் பிரிந்திருப்பது எனக்கு மாத்திரம் சந்தோஷமாக இருக்கிறதென்று நினைக்காதே. உன் மன சங்கடத்தை நீ அடக்கமாட்டாமல் இப்படி வெளியில் காட்டுகிறாய். நான் அதை வெளியில் காட்டாமல் உள்ளாறவே வைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறேன். இருவருக்கும்