பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் 18i அவனுடைய குடும்பத்தில் விருத்தாப்பிய தசையடைந்த தகப்பன், தாய், சகோதர சகோதரிகள் முதலிய ஏராளமான ஜனங்கள் இருந்தமையால், அவர்கள் எல்லோரையும் போஷித்துக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு முன் குறிக்கப் பட்ட மூத்த பிள்ளைக்கே வந்துசேர்ந்தது. அண்ணாசாமி என்ற பெயர் கொண்ட அவன் தனக்கு ஏதேனும் உத்தியோகம் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்று பல உத்தியோக ஸ்தலங்களிலும் போய் முயற்சித்துப் பார்த்தான். எவ்விடத்திலும் அவனுக்கு உத்தியோகம் கிடைக்கவில்லை. வேறு கைத் தொழிலாவது வியாபாரமாவது செய்வது அவனுக்கு இழிவாகப் பட்டது. பல இடங்களில் அவன் கடன் வாங்கி வாங்கிச் செலவிட்டு வந்ததும் சிறிது காலத்திற்குமேல் நடக்கவில்லை. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வகையில்லாது இருந்தமையால், எவரும் அவனுக்குக் கடன் கொடுக்க மறுத்தனர். முன்னரே கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவனை அரிக்கலாயினர். அவனது நிலைமை பரமசங்கடமான தாகிவிட்டது. தான் என்ன செய்வது, எப்படித் தனது குடும்பத்தை நடத்துவது என்பதைப் பற்றி அவன் இரவு பகல் சிந்தனை செய்துசெய்து எவ்வித முடிவிற்கும் வரமாட்டாதவனாய்த் தத்தளித்து முடிவில் தான் தற்கொலை செய்துகொள்வதே எல்லாவற்றிற்கும் முடிவான பரிகாரமென்று நினைத்திருந்த காலத்தில், பக்கத்து வீட்டு மனிதர் தமக்கு வந்து கொண்டிருந்த இங்கிலீஷ் சமாசாரப் பத்திரிகை யைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து, "அடேய் அண்ணாசாமி! மஞ்சட்குப்பம் கலெக்டர் இன்று ஒரு விளம்பரம் வெளியிட்டிருக் கிறார். நாற்பது ரூபாய் சம்பளத்தில் இரண்டு ரெவினியு இன்ஸ்பெக்டர்களுக்கு மனிதர்கள் தேவையாம். அவர்கள் பி.ஏ. பரிட்சையில் தேறி இருக்க வேண்டுமாம்; தக்க பெரிய மனிதர்களிடம் நற்சாகரிப் பத்திரம் வாங்கியனுப்ப வேண்டுமாம். நீ இதற்கு மனுப்போடு” என்று கூறிவிட்டுப் போனார். அதைக் கேட்ட அண்ணாசாமி மிகுந்த களிப்பும் நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டு, உடனே மனுவை எழுதி முடித்தான்; முடித்தபின், தக்க பெரிய மனிதர்களுடைய