பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 197 உண்மையைச் சொல்லி வைக்கிறேன். திருவிடமருதூரிலிருந்து ஒரு மனிதன் வந்து ஒரு மாசகாலமாய் நம்முடைய திருவனந்த புரத்தில் இருந்தான். அவன் என்னோடு பிரியமாகப் பேசிப் பேசி எப்படியோ என் சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டதன்றி, எனக்கு அடிக்கடி இனாம் சனாம்களும் கொடுத்துக்கொண்டே வந்தான். அவன் என்னிடம் நிரம்பவும் அந்தரங்கமான பிரியம் வைத்திருப்பதாக நான் எண்ணி அவனுடைய பிரியப்படியே நானும் நடக்கத் தொடங்கினேன். கடைசியில் சில தினங்களுக்கு முன் அவன் என்னிடம் ரொக்கமாக ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து அதை ஒரு காரியத்திற்காகத் தங்கள் சம்சாரம் எனக்குக் கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்தான்.” திவான் முற்றிலும் குழம்பித் திகைத்து, 'யார்! யார்! என்னுடைய சம்சாரமாகிய காந்திமதியம்மாளா ஐயாயிரம் ரூபாயை உனக்குக் கொடுக்கச் சொன்னதாக அவன் சொன்னான்? என்றார். முத்துசாமி, "ஆம் ஆண்டவனே! எஜமானியம்மாள் தான் கொடுக்கச் சொன்னதாக அவன் சொன்னான். உண்மையில் அது நிஜமோ பொய்யோ வென்பது எனக்குத் தெரியாது. எதற்காக அவ்வளவு பிரம்மாண்டமான பணத்தொகை எனக்குக் கொடுக்கப்படுகிறதென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் சொன்னதை வாயில் வைத்து இந்தச் சன்னிதானத்தில் வெளியிட வாய் கூசுகிறது. ஆனாலும் தங்களுடைய எதிர்கால rேமத்தைக் கருதி நான் எதையும் மறைக்காமல், நடந்ததை நடந்தபடி சொல்ல வேண்டியிருக்கிறது. நம்முடைய எஜமானியம்மாளுக் குத் திருவிடமருதூரில் யாரோ ஒர் ஆசைநாயகர் இருக்கிறாராம். அம்மாள் இங்கே வருகிறதற்கு முன் அதுவரையில் அவரோடு ஈருடலும் ஒருயிருமாய் இருந்தார்களாம். இங்கே வந்தபின் அங்கே திரும்பிப் போவதற்குத் தாங்கள் சந்தர்ப்பமே கொடுக்கவில்லையாம். அந்த ஆசை நாயகர் இரண்டு மாச காலத்திற்கு ஒருதரம் திருவனந்தபுரத்திற்கு வருவாராம் தாங்கள் இல்லாத காலங்களில் அம்மாளோடு பேசிவிட்டுப் போவாராம். அவர் இதே ஏக்கமாய்ப் பைத்தியங் கொண்டவர்போல இருக்கிறாராம். தங்களைக் கொன்றுவிட்டு அம்மாளை ஊருக்கே