பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10-வது அதிகாரம் புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை னி நாம் நமது கோகிலாம்பாளைக் கவனிப் در بوستونسي போம். அந்த உத்தமகுண மடந்தை தனது அன்னையிட்ட கட்டளையின்படி, சிறைச் . : சாலையிலிருந்த கண்ணபிரானைப் பார்த்து '; அவனுக்குத் தேறுதல் கூறி அவனது யோசனை களை நிறைவேற்றி வைக்கும் கருத்துடன் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரது சூழ்ச்சி வலைக்கு இலக்காய் அவரது சயன அறைக்குள் நுழைந்த வரலாறு முன்னரே கூறப்பட்டிருக்கிறது. அந்த ஏந்தெழில் அணங்கு முதலிலிருந்த அறையைக் கடந்து அதற்கப்பாலிருந்த இரண்டாவது அறைக்குள் நுழைந்தவுடனே முதல் அறைக்கு வெளியிலிருந்த கதவு மூடப்பட்டு வெளிப்புறத்தில் தாளிடப்பட்டதென்பதும், அதே காலத்தில், இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை மோக ஆவேசங் கொண்டவராய் அந்தப் பெண்மணியை ஒரு குழந்தையைத் தூக்குவதுபோலத் தூக்கி எடுத்துக்கொண்டு கட்டிலுக்குப் போகவேண்டுமென்ற கருத்தோடு எதிர்கொண்டோடி வந்து அவளிடம் நெருங்கி அவளைத் துரக்க முயன்றார் என்பதும் முன்னரே சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. சிறிதும் எதிர்பார்க்கப்படாத அந்த விபரீத நிகழ்ச்சியைக் கண்ட பெண்ணரசி திடுக்கிட்டு திக்பிரமைகொண்டு அபாரமான திகிலடைந்து சரேலென்று தத்திக் குதித்து சிறிதி தூரம் பின்னால் நகர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டரது பிடியில் அகப்படாமல் விலகி நின்றாள். ஹா! யார் இவர் இது எந்த இடம் போலீஸ் ஸ்டேஷனா இது! இது சயன அறைபோலக் காணப்படுகிறது! என்னுடைய பிரானபதி காணப்படவில்லை! வேறே யாரோ ஒரு மனிதர் இருக்கிறார்: இவர் ஏதோ துர் நினைவோடு, யாரோ ஒரு ஸ்திரீயின்