பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 239 ஒத்தடம் முதலிய வெளிப் பிரயோகங்களையும் செய்யத் தொடங்கினார். அவர் தமது திறமை முழுதையும் காட்டி அவனுக்குரிய சிகிச்சைகளையெல்லாம் விடாமுயற்சியோடும், கவனத்தோடும் ஊக்கத்தோடும் செய்து கொண்டே இருந்தார். ஆனாலும், இரத்தமாக வாந்தியெடுப்பதும் வயிறு போவதும் வெகு நேரம் வரையில் குறையாமலேயே இருந்தன. அவனது கைகால்கள் முதலிய அங்கங்களெல்லாம் விரைவாக குளிர்ந்து தளர்ந்து போய்க் கொண்டே இருந்தன. ஆனாலும் அவர் ஒத்தடத்தினால் அவைகளுக்கு சூடு ஏற்றிக்கொண்டே இருந்தார். முத்துசாமி பாஷாணத்தைத் தின்றுவிட்டு மரணாவஸ்தைப் பட்டுத் தவிக்கிறான் என்ற செய்தி ஒரு நிமிஷத்தில் அந்தக் கூடாரம் முழுதும் பரவவே, திவானின் சிப்பந்திகளும் குமாஸ்தாக்களும் மற்றும் சநிதொடர் மங்கலத்து வாசிகள் சிலரும் ஒடோடியும் வந்து கூடி, அவனது பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டு மிகுந்த இரக்கமும் விசனமும் அடைந்து தம் தம்மாலேன்ற உதவியைச் செய்ய முன்னுக்கு வந்தனர். திவான் முதலியார் சித்தப்பிரமை கொண்டவர் போல் மாறி எவரோடும் வாயைத் திறந்து பேசவும் சக்தியற்றவராய் இடிந்து அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். தமது ஆருயிர் மனையாட்டியான காந்திமதியம்மாளைப்பற்றித் தமக்குக் கிடைத்த விபரீதச் செய்தி ஒரு புறத்தில் அவரது உயிரைப் பருகியது. ஆனாலும், அவரது கவனம் முக்கியமாய் முத்து சாமியின் மீதே சென்றது. அவன் தத்தளித்துத் தவித்து உயிருக்கு மன்றாடியதைக் கண் கொண்டு பார்க்கவே சிறிதும் சகிக்கவில்லையானாலும், திவான் அடிக்கடி எழுந்து போய் அவனைப் பார்த்து அவனது நிலைமை எப்படி இருக்கிறதென்று கேட்பதே வேலையாகச் செய்யத் தொடங்கியதன்றி, தமக்குத் தாமே பலவாறு எண்ணமிடத் தொடங்கினார். "ஐயோ! தெய்வமே கருணாநிதே இவன் படுகிற பாட்டைப் பார்க்கச் சகிக்கவில்லையே! பாவியாகிய என் பொருட்டு இவன் இப்படியும் துன்புறவேண்டுமா? என் மேல் யாரோ rாத்திரம் வைத்து என்னைக் கொல்ல எண்ணினால், அது இவனுக்கா வந்து வாய்க்கவேண்டும்! எய்தவனிருக்க அம்பை நோவதுமுண்டா? இந்த முத்துசாதி எய்தவனல்லவே, அம்புதானே எவன் இவனைத்