பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 241 இப்பந்திகளாகிலும் ஆகாரத்தையாவது, நித்திரையையாவது நினையாமல், தங்களது கவனம் முழுதையும் முத்துசாமியின் விஷயத்திலேயே செலுத்தி அதே கவலையாகவும் நினைவாகவும் இருந்து அந்தக் கொடிய இரவைக் கழிக்கலாயினர் மற்றவரது மன நிலைமையைவிட, திவான் முதலியாரினது மனம் பதினாயிரங் கோடி மடங்கு துன்பகரமாகவும் விசன நிறைவாக வும் மாறிக் கொடிய நரக வேதனையில் ஆழ்ந்துபோயிருந்தது. அவர் ஒரு நிமிஷமும் ஓய்வின்றிக் கடவுளை நினைத்து ஸ்தோத்திரம் செய்தபடியும் தமது நிலைமையைப் பற்றிப் பலவாறு சிந்தனை செய்தபடியும் இருந்தார். 'என்னோடு உயிருக்குயிராய்ப் பொருந்தி வாஞ்சையும், பணிவும், மிருதுத் தன்மையும், கபடமற்ற உண்மையான குணமும் வடிவெடுத்தது போல இதுவரையில் நடந்துவந்த அருமைக் கண்ணாட்டியான என் காந்திமதியும் இப்படிச் செய்திருப்பாளா! என்ன அதிசயம் இது! இப்படியும் உலகத்தில் நடக்குமா மனத்திற்குள் கபட நினைவையும் திருட்டுக் குணத்தையும் வைத்து, அது சிறிதும் வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டு இத்தனை வருஷ் காலம் இவள் என்னிடம் கபட நாடகம் நடக்க முடியுமா? இவள் அப்படிச் செய்திருப்பாளானால், இவளை என்னவென்று சொல்வது! தாசி, வேசைகளைக்காட்டிலும், கொடிய பாஷாணத்தைக் காட்டிலும், பயங்கரமான சர்ப்பத்தின் கால கோடி விஷத்தைக் காட்டிலும் லக்ஷம்கோடி மடங்கு கொடிய - மனது வாய்ந்த பரம துஷ்டை என்றல்லவா இவளை நான் மதிக்கவேண்டும்? ரோஜாப் புஷ்பம், தாமரைப் புஷ்பம், மாந்தளிர் முதலியவற்றைக் காட்டிலும் மகா மிருதுவான குணமும், நடத்தையும் வார்த்தையும் வாய்ந்துள்ள இந்த மெல்லியலாள் வெளிப் பார்வைக்கு மாத்திரம் இப்படிக்குக் காட்டிக்கொண்டு உள்ளுக்குக் காலகோடி விஷத்தை அடக்கிக் கொண்டிருப்பது சாத்தியமான செய்கையா? இதை நினைக்க நினைக்க, என் அறிவு குழம்பிப் போகிறதே! மூளை தெறித்துப் போகும் போலிருக்கிறதே! இதன் உண்மையை நான் எப்படி நிச்சயிக்கப் போகிறேன். முத்துசாமி அவன் ஒப்புக்கொண்டது போல, பண ஆசையினாலும், என் மனையாட்டியின் மேல் வைத்திருந்த அபாரமான மதிப்பினாலும், மதியிழந்து இந்தக் செ.கோ.ii-16