பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 செளந்தர கோகிலம் அதை வைத்துக்கொண்டு தலை கால் தெரியாமல் குதித்து ஊருக்கு அடங்காமல், ஜனங்களை இலட்சியம் செய்யாமல் பழைய கட்டுப்பாடுகளை மதியாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்ச் செய்து, முடிவில் அழிந்து போகும்படி அதுசெய்து விடுமே! நிதான புத்தியும், எப்பொழுதும் பழைய நிலைமையை மறவாமல், நிறை தவறாமல், ஆணவம் கொள்ளாமல் நடக்கும் தன்மையும் உடைய புத்திமான்களுக்குத் தான் பெரிய செல்வம் உரியது; அவர்களிடம் தான் அது நீடித்து நிற்கிறது. யோக்கியதையற்ற மற்ற மனிதர்களிடம் செல்வம் உண்டாகுமானால், அது குடிக்கும், கூத்திக்கும், கள்வருக்கும், மோசக்காரருக்கும், கச்சேரிகளில் விரயம் செய்வதற்கும், வைத்தியர்களுக்குக் கொடுக்கவும், பங்காளிகள் அபகரிப் பதற்கும், இன்னம் இப்படிப்பட்ட அக்கிரமச் செலவுகளுக்குமே உபயோகப்படும். யோக்கியர்களிடம் இருக்கும் பொருள் அவர்களுக்கு நல்லவழி காட்டி அவர்கள் மேன்மேலும் அதிகரிக்கும் கீர்த்தியும் பெயரும் நற்குண நல்லொழுக்கமும் பெற்று சுேமப்பட்டு அமோகமாய் வாழும்படிச் செய்கிறது. யோக்கியதை அற்றவர்களிடம் திடீரென்று வந்து சேரும் பொருள் அவர்களுக்குக் கெட்ட வழியையே காட்டி அவர்கள் மேன்மேலும் துர்க்குணங்களிலும் கெட்ட காரியங்களிலும் பழகி அபகீர்த்திக்கும் துாஷனைக்கும் நோய்க்கும் இலக்காய் முடிவில் அழிந்து போகும்படிச் செய்கிறது. ஆகையால், செல்வத்தில் ஒன்றுமில்லை. மனிதரை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவரவர்களுடைய குணமும் நடத்தையுமேயன்றிப் பணமல்ல. ஆனால், உலகத்திலுள்ள மனிதப் பதர்களுள் சிலர் அதிகப் பணம் படைத்தவன் எப்பேர்ப்பட்டவனானாலும் தமது சுயநலங் கருதி அவனிடம் சென்று அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து அவனிடத்தில் அடிமைக்கும் அடிமையாக நடந்து கொள்ளுகிறார்கள். அப்படிச்செய்வதெல்லாம் அந்தப் போலிப் பணக்காரர்களை இன்னம் மேன்மேலும் கெடுக்கிற சாதனமேயன்றி வேறல்ல. இவைகளை எல்லாம் எண்ண எண்ண நான் நெடுநாளாக ஒருவித அபிப்பிராயத்தோடு இருந்து வருகிறேன். பணம் திடீரென்று அபாரமாய் வந்து எவனுக்கும் சேரக்கூடாது. அப்படி வந்தால், அதன் அருமை தெரியாது.