பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 செளந்தர கோகிலம் கொடுத்த உடைகளையெல்லாம் செங்காவியில் நனைத்துக் காயவைத்து அவைகளோடு வேறு சில சாமான்களையும் வைத்து ஒரு சிறிய முட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டார். அவ்வாறு தமது மாளிகைக்குள் போய்த் தமது FLIT அறையையும், போஜனம் ஸ்நானம் முதலியவை செய்த இடங்களையும் பார்க்கவே, காந்திமதியம்மாளும், ராஜாபகதூரும் உயிரோடு அங்கு நின்று சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டு அவருடன் பேசுவது போலவே அவர் உணர்ந்தார். அதற்குமுன் காந்திமதியம்மாள் அவருடன் சம்பாஷித்த அழகான வார்த்தைகள் யாவும் அப்போதும் அவரது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. அவள் தம்மோடிருந்து தமது மனம் பரவசம் அடையும்படி பேசிய வார்த்தைகளும் செய்த செய்கைகளும் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரவே, அவரது மனம் அவரை மிஞ்சி இளகிப் பாகாய் உருகத் தொடங்கியது. அவரது இரு கண்களிலிருந்தும் கண்ணிர் தாரை தாரையாக வழிந்தோடத் தொடங்கியது. அவரது தேகம் பதறியது. அவர் குழந்தை அழுவதைப்போவத் தேம்பித் தேம்பி அழுது, 'ஆ' என்ன உலகம்! என்ன புருஷன் பெண்ஜாதி! என்ன மனிதவாழ்க்கை! எல்லாம் மாயை எல்லாம் பொய்த் தோற்றம்! இந்த உலகமும் இதிலிருக்கும் உயிருள்ளதும் இல்லாததுமான ஒவ்வொரு வஸ்துவும் அநித்தியம். எல்லாம் பொய் வடிவம். எல்லாம் அழிந்து போவது. கடவுளின் சிருஷ்டி முழுதும் ஒரே பொய் மயம், இதில் நிஜமான நீடித்த மாறாத அன்பும் உண்மையான பற்றும் எங்கிருந்து கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மூல காரணமாயும் உயிருக்குயிராயும் இருந்து படைத்துக் காத்து அழிக்கும் தெய்வத்தினிடத்தில் உண்மையான மாறாத பயபக்தியுள்ளவர் இந்த உலகத்தில் எத்தனை பேர்? வெகு சொற்பமான மனிதரே கடவுளிடம் பக்தியுடையவராய் இருக்கின்றனர். கடவுளுடைய கதியே இப்படியிருக்கையில், ஆற்று வெள்ளத்தில் கிடந்து மிதக்கும் ஒரு துரும்பு போல இருக்கும் அற்ப ஜெந்துவாகிய நான் பிறரிடம் மாறாத உண்மையான பிரியத்தை எதிர்பார்ப்பது பலிக்கக்கூடிய காரியமா? நான் எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனெடுக்க எண்ணுவது போன்றதேயன்றி வேறல்ல. தந்தை தாய் தமர் தாரம்