பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ 61 சப்ஜெயிலுக்கு ஒட்டும்படி ஆக்ஞாபித்தாள். உடனே வேலைக் காரனும் ஏறி உட்கார, வண்டி புறப்பட்டு விரைவாகச்சென்று அரைநாழிகை சாவகாசத்தில் சப்ஜெயிலின் வாசலையடைந்தது. அந்தச் சொற்ப காலத்திற்குள் பூஞ்சோலையம்மாளினது மனம் அபாரமான சஞ்சலத்தில் ஆழ்ந்து கட்டிலடங்காமல் துடி துடித்துப் பறந்துகொண்டே இருந்தது. தேகம் முள்ளின்மேல் இருப்பதைப்போல சகிக்கவொண்ணாத துன்பத்தை அடைந்து, இருக்கை கொள்ளாது தத்தளித்தபடி இருந்தது. வண்டி சப்ஜெயில் வாசலை அடைந்த உடனே பூஞ்சோலையம்மாளும் மற்றவர்களும் அவ்விடத்தில் யார் இருந்தனர் என்பதை உணரும் பொருட்டு சுற்றுமுற்றும் பார்த்தனர். சப்ஜெயிலின் வாசலில் கத்தி துப்பாக்கிகளுடன் பாராக்கொடுத்து அங்குமிங்கும் உலாவிய வண்ணம் நின்றுகொண்டிருந்த இரண்டு ஜெவான் களைத்தவிர வேறு மனிதரே காணப்படவில்லை. ஆகவே, வேலைக்காரன் மாத்திரம் கீழே இறங்கினான். அந்த வேலைக் காரன் நிரம்பவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், உண்மையாக வும் நடப்பவன். ஆதலால், அவர்கள் புரசைப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வந்தபோதே பூஞ்சோலையம்மாள் அவனிடம் சிற்சில தகவல்களை மாத்திரம் தெரிவித்துவைத்திருந்தாள். கண்ண பிரான் ஸ்டேஷன் அதிகாரிகளினது அனுசரணையைப்பெற்று தனக்கு வக்கீல்வைத்து உதவிசெய்யும் விஷயமாய்ப் பேசும் பொருட்டு, யாராவது வரவேண்டுமென்று கடிதம் எழுதி அனுப்பியதாகவும், ஒர் அவசர காரியத்தை உத்தேசித்து தான் வீட்டில் இருக்க நேர்ந்தமையால், கோகிலாம்பாளையே அனுப்பிவைத்ததாகவும் அந்த அம்மாள் ஒருவிதமாக வேலைக் காரனிடம் தெரிவித்து வைத்திருந்தாள். ஆதலால், அவன் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஜெவானுடன் எல்லா விஷயங்களையும் கதாவாகவே பேசிவிட்டு வந்துசேர்ந்ததன்றி, சப்ஜெயில் வாசலிலும் தானே போய் விஷயத்தைத் தெரிந்து கொண்டுவருவதாகப் பூஞ்சோலையம்மாளிடம் கூறிவிட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கி, பாராக்காரர்கள் நின்ற இடத் திற்குப்போய், அவர்களிடம் நயமாகப் பேச்சுக்கொடுத்து, "ஐயா! தபால் திருட்டுச் சம்பந்தமாகக் கைதி செய்யப்பட்ட ஒரு