பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18-வது அதிகாரம் ஏழரை நாட்டான் தர்பார்-இறந்து பிழைத்தவர்

  • தந்தை ஒரு யெளவனக் குமரியை மணந்து γ \ கொள்வதை உணர்ந்து அவரது இன்ப வாழ்க்கை ή - R யைத் தாம் சீர்குலைப்பதைவிடத் தமது , s வாழ்க்கையையே சீர்குலைத்து உலகப்பற்றை ?) விலக்கி ஊருராய்ச் சென்று, புண்ணிய தீர்த்தங் சீ களில் ஆடி, க்ஷேத்திரவாசம் செய்து, தமது

ஜென்மத்தை ஒழித்து நற்கதியடைய வேண்டு மென்று தீர்மானம் செய்துகொண்ட நமது திவான் முதலியார்

திருவடமருதூரை விடுத்துச்சென்றபின் முறையே மாயூரம், வைத்தீசுவரன் கோவில், சிதம்பரம் முதலிய புண்ணிய rேத்திரங்களை அடைந்து அவ்விடத்தில் இரண்டொரு தினங்கள் இருந்து சுவாமி தரிசனம் செய்துகொண்டு மேலும் வடக்கில் சென்று, திருவண்ணாமலை, காளஹஸ்தி, திருக்கழுக் குன்றம், திருப்போரூர், திருத்தணிகை, திருவெற்றியூர், திருப்பதி, பத்திராசலம், சிருங்கேரி, பண்டரீபுரம், ஜெகந்நாதம், பிருந்தா வனம், கோகுலம், காசி, கயா, ஹரித்துவாரம், காஷ்மீர் வரையில் கால் நடையாகவே பிரயாணம் செய்து, ஆங்காங்கு காணப் பட்ட இயற்கை அற்புதங்களையும், மனிதரது நடையுடை பாவனை வேறுபாடுகளையும் கண்டு, அவ்விடத்தில் வெவ்வேறு பெயருடன் கோவில் கொண்டுள்ள பரம்பொருளைத் தரிசித்து, சத்திரத்தில் போஜனமும் திண்ணையில் சயனமுமாய் சதா காலமும் ஈசுவரனைத் தியானம் செய்தபடி தமது பொழுதைப் போக்கத் தொடங்கினார். அவர் சென்றடைந்த புண்ணிய rேத்திரங்களில் எல்லாம், ஏராளமான ஸாதுக்கள், பைராகிகள், பரதேசிகள், ஞானிகள் முதலிய மகான்களின் சங்கமமும்,