பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 117

கட்டணத்தை அப்போது செலுத்தினார். அந்த விளம்பரம் அடியில் வருமாறு :

சென்ற சில வருஷங்களுக்கு முன் திருவநந்தபுரம் சமஸ்தானத்தில் திவான் வேலையிலிருந்து புலியடிக்கப் பட்டதனால் இறந்துபோன முதலியாருடைய பணம் சுமார் இரண்டு லக்ஷம் ரூபாய் வரையில் ஒரிடத்தில் இருக்கிறது. தமக்குப் பிறகு அந்தத் தொகையை ராஜாபகதூர் என்ற பெயர் கொண்ட தமது குமாரனிடம் சேர்த்துவிடவேண்டுமென்று அவர் கைச்சரத்துக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிறுவன் இப்போது இன்ன இடத்தில் இருக்கிறான் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆகையால், அவனாவது, அல்லது வேறு எவராவது அவனுடைய தற்கால இருப்பிடத்தை அடியிற் காணப்படும் விலாசத்திற்கு எழுதியனுப்பினால் அந்தத் தொகையை உடனே அவனிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்விஷயத்தில் உதவி செய்யும் கனவான்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலை முன்னதாகவே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இங்ஙனம்,

மேகலிங்கப் பண்டாரம்

என் விலாசம்

தஞ்சை ஜில்லா, திருவடமருதூர் போஸ்டு மாஸ்டர்

மேல்பார்த்து, மேகலிங்க பண்டாரம்

என்ற விளம்பரத்தை மறுநாளைய பத்திரிகையில் பிரபலமான இடத்தில் பெரிய எழுத்துக்களில் பிரசுரிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு திவான் சாமியார் வெளியில் சென்று திருவடமருதூர் போஸ்டு மாஸ்டருக்கு ஒரு கடிதம் எழுதி, மேலே காட்டப்பட்ட விலாசத்திற்கு வரும் கடிதங்களைத் தாம் நேரில் வந்து கேட்கும்வரையில் ஜாக்கிரதையாக வைத்திருக்கும் படி அதில் கண்டு அதை ரிஜிஸ்டர் செய்து அனுப்பிவிட்டார்.

அதன்பிறகு திவான் சாமியார் சென்னையில் சில தினங்கள் தங்கி அவ்விடத்திலிருந்து கால்நடையாகவே புறப்பட்டு மேலும் தென் திசையில் யாத்திரை செய்யலானார். அதற்கு முன் தாம் வடக்குத் திக்கில் சென்ற காலத்தில் எந்தெந்த ஊர்களின்