பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 செளந்தர கோகிலம்

பளுவான உணவு செல்லவே அதைத் தாங்க மாட்டாமல் அவனுக்கு அலுப்பும் தூக்கமும் வந்துவிட்டன. அவன் அப்படியே படுத்து வெகுநேரம் வரையில் தூங்கி விழித்துப் புத்துயிரும் புதுக்களையும் பெற்று எழுந்து உட்கார்ந்து கொண்டான். அப்போதும் அவ்விடத்திலேயே இருந்த திவான் சாமியார் அவனை நோக்கி, “ஐயா! உங்களுக்கு உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? கொஞ்சம் செளக்கியமாக இருக்கிறதா? இனி தைரியமாகப் போவீர்களா? இந்த ஜவுளி களையும் பாத்திரங்களையும் உங்களுடைய உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள். இவைகள் தவிர, நான் உங்களுக்கு ஐந்நூறு ரூபாய் பணம் தருகிறேன். அதை வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுடைய சொந்த ஊர் எதுவோ அதுக்குப் போய் செளக்கியமாய் இருங்கள். வேறே எந்த இடத்திற்கும் போய் அலைய வேண்டாம். நானும் புறப்பட்டுப் போய் என் விதியைத் தொலைக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட கிழவனுக்குத் தன்னை அறியாமல் ஆநந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உடம்பு பரவசமடைந்தது. அவன் நிரம்பவும் வணக்கமாகவும் பயபக்தி விநயத்தோடும் பேசத் தொடங்கி, ‘சுவாமிகளே! நான் முன்னே சொன்னபடி எனக்கு இப்போது மறுபடி சுக்கிர தசை ஆரம்பமென்றே நினைக்கிறேன். ஆனால், எனக்குப் பணமென்றாலே பயமாக இருக்கிறது. பணம்தான் மனிதருக்கு எமன். பணத்தினாலேயே மனிதர் பூஜிதையும் சுகமும் அடைகிறது. பணத்தினாலேயே மனிதருக்கு கஷ்டங்களும், கவலைகளும், துயரமும், அபாயங்களும் நேருகின்றன. அது இல்லா விட்டாலும், மனிதருக்கு உய்வில்லை. அதை வைத்திருப்பதும் அபாயகரமாக இருக்கிறது. நான் இதற்கு முன் ரொக்கமாக சுமார் ஆயிரம் ரூபாய் பணம் வைத்துக் கொண்டிருந்தேன். என்னோடு இருந்த ஒரு பரதேசி எனக்கு வேண்டியவன்போல இருந்தான். நான் துரங்கியபோது அதை அபகரித்துக் கொண்டு ஒடிப்போய் விட்டான். இப்போது இந்தப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தாலும், இதன் கதியும் அப்படித்தான் முடியுமோ என்னவோ! எனக்கும் பணத்துக்கும் இராசியே இல்லை” என்றார்.