பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 143

விஷயங்களை எல்லாம் அவரிடம் வெளியிடுவதற்கு அது சரியான தருணமல்லவென்றும் திவான் எண்ணினார். தாம் இன்னார் என்பதை அப்பொழுது வெளியிடுவது தமது தந்தைக்குச் சிறிதும் நன்மையை விளைவிக்காமல் பெருத்த தீங்கையே விளைவிக்கும் என்றும், அதுவே அவரைக் கொன்றாலும் கொன்றுவிடும் என்றும், திவான் எண்ணினார். ஆதலால், தமது தந்தையின் நன்மையைக் கருதித் தாம் உண்மையான வரலாற்றைச் சிறிது காலத்திற்கு மறைத்து வைப்பதே உசிதமான காரிய மென்றும், சில மாத காலத்தில் அவரைத் தேற்றி நல்ல நிலைமைக்குக் கொணர்ந்த பிறகு சமயம் பார்த்து சிறுகச் சிறுக விஷயங்களை வெளியிட்டு, அவர் திடுக்கிட்டுப் போகாதபடி தந்திரமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் திவான் தீர்மானித்துக் கொண்டார். ஆயினும், தாம் தமது தந்தையின் விபரீத வரலாற்றைக் கேட்டு மயங்கி வீழ்ந்ததற்குத் தக்க சமாதானம் கூற வேண்டியது அவசியமாகத் தோன்றியது ஆகையாலும், அதன் பிறகு தமது தந்தையைத் தமது ஆதினத்தி லும் சவரக்ஷணையிலும் வைத்துக் கொள்வது அத்தியாவசியமாக இருந்தமையாலும், அதற்குத் தகுந்தபடி தாம் தமது வரலாற்றை மாற்றிக் கூறவேண்டுமென்று திவான் தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறு அவர் எண்ணமிட்டபடி குழப்பமான மன நிலைமை யில் இருக்க, மறுபடி குஞ்சிதபாத முதலியார் அவரை வாஞ்சை யாக நோக்கி, ‘சுவாமிகளே! இந்த ஏழையின் வரலாற்றைக் கேட்க தங்களுக்குச் சகிக்கவில்லையோ ஈசுவரன் தங்களுக்கு நிரம்பவும் தயாளமான மனசைக் கொடுத்திருக்கிறார் என்பது, தாங்கள் எதையும் கருதாமல் எனக்குச் செய்த உதவிகளிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் மகா துன்பகரமான என்னுடைய விருத்தாந்தம் தங்களுடைய மனசை அத்யந்த சஞ்சலத்தில் ஆழ்த்திவிட்டது போலிருக்கிறது. பொதுவாக எவருக்கு இப்பேர்ப்பட்ட அவகேடு நேரிடுவதானாலும், உத்தம குண புருஷர்களுடைய மனம் தாளாது. ஆனாலும், ஒரு வேளை என்னைப்பற்றி இதற்கு முன் தாங்கள் கேள்வியுற்றிருப்பீர்களோ அல்லது என்னைப் பார்த்திருந்தாலும் இருப்பீர்களோ என்னவோ தெரியவில்லை. தங்கள் பூர்வீகர்களுடைய இருப்பிடம் எதுவோ? என்றார். -