பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 145

என்று கூறினார். அதற்குள் அபாரமான மனவெழுச்சியும் வேதனையும் பொங்கியெழுந்து அவரது தொண்டையை அடைத்துக் கொண்டன. ஆதலால் அவர் சிறிது நேரம் கண்களை மூடி மெளனத்தில் ஆழ்ந்து போனார்.

அந்த வரலாற்றைக் கிழவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், அவரது மனதும் அப்படியே பொங்கிப் போய்விட்டது. தேகம் பரவசமடைந்து துடித்தது. தன்னையே மறந்து, தமக்கெதிரிலிருந்த திவான் சாமியாரின் மீது தமது இருகரங்களையும் வைத்து வாஞ்சையோடு தழுவி வாய்விட்டுக் கோவெனக் கதறியழுது, “ஆகா! ஐயோ! அகாலக் கொள்ளையாக நான் இழந்த என் செல்வத் திருமகனுடைய வடிவத்தை நான் மறுபடி காணவேண்டுமென்று திருவுளம் பற்றி, அவனைப் போல ஏற்கெனவே சிருஷ்டிக்கப்பட்டிருந்த தங்களைக் கடவுள் இப்பொழுது இங்கே அனுப்பி வைத்தாரோ? ஆகா! என்ன அவனுடைய காருண்யம்! என்ன அவனுடைய திருவிளையாடல்: அவனுடைய சூழ்ச்சித் திறனை யார்தான் அறியவல்லர்’ என்று தழுதழுத்த குரலில் கூறிக் குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார். அதைக்கண்டு சகியாத திவான் சாமியார், “பெரியவரே! நீங்கள் இப்படிக் கசிந்துருகி அழுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்முடைய சாஸ்திரம் எந்த ஜீவனும் இறந்து போகிறதில்லை யென்றும், இறப்பு, பிறப்பென்பது ஜீவன், கிழிந்துபோன ஒரு சட்டையை விலக்கிவிட்டு இன்னொரு புதிய சட்டையை அணிந்துகொள்வது போன்றதே யன்றி, வேறல்ல வென்றும், இறந்து போனதாகத் தோன்றும் ஜீவர்களை மறுபடி காணலாமென்றும் முறையிடுவதை நீங்கள் படித்திருந்தும் இப்படி மனத் தளர்வடைந்து, குழந்தை போல அழுவது சரியல்ல. உங்களுடைய குமாரரை நீங்கள் இனி எங்கேயாவது மறுபடி சந்தித்தே தீருவீர்கள். நாங்கள் இருவரும் ஒரே மனிதராக இருந்தோம் என்று சொன்னேனல்லவா அவர் மண்ணுலகில் மறைந்து போனபிறகு, அநாதரவாக இருக்கும் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோவென்று கவலையுற்று வந்து பார்த்தேன். அப்பொழுது கடவுள் உங்களுக்கு வேறு சில மனிதர்களுடைய உதவியைக் கூட்டி வைத்து நீங்கள் மறுபடி கல்யாணம் செய்து கொள்ளவும் அநுக்கிரகித்ததை உணர்ந்து செ.கோ.iti-10