பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 4.59

இனாம் கொடுப்பார்கள் என்று எண்ணி அவன் இதை எடுத்து வந்தானாம், வந்த இடத்தில் அவனுக்குப் பணத்தட்டு வந்து விட்டது. இதை என்னிடம் கொடுத்து ஒரு ரூபாய் வாங்கிப் போனான். அதை இரண்டு ரூபாயாய்த் திருப்பிக் கொடுத்துவிட்டு மறுபடி இதை வாங்கிக் கொண்டு போவதாய்ச் சொன்னவன், அவன் குறித்த வாயிதாவுக்குள் வரவில்லை. ஆகையால் இதை நான் விற்கிறேன். இது யாருக்குப் போகிறதோ, அவருக்கு லாட்டரிச் சீட்டு மாதிரி பெரிய பணத் தொகை கிடைக்கும்’ என்றான்.

அவன் சொன்ன வரலாற்றை சிலர் உண்மையென்று எண்ணினார்கள் சிலர் பொய்யாக மதித்தார்கள். ஆயினும் எவரும் இதை வாங்கவில்லை. திருவனந்தபுரம் திவானின் தகப்பனார் என்ற சொல்லைக் கேட்டவுடன், எனக்கு இந்தக் கிழவருடைய ஞாபகம் உண்டாயிற்று. நான் உடனே இந்தப் படத்தை வாங்கிப் பார்த்தேன். இதற்குமுன் இந்தக் கிழவரை நான் பார்த்திருப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா! படத்தைப் பார்த்தது கிழவரை நேரில் பார்த்ததுபோல இருந்தது. நான் உடனே இதற்கு விலை பேசி முடித்துப் பணத்தைக் கொடுத்து இதை வாங்கிக் கொண்டேன். இதை நான் வாங்கினபொழுது என்ன உத்தேசம் தெரியுமா? இந்தக் கிழவருடைய சம்சாரம் முதலியோரிடம் ஒரு வேளை இப்படிப் பட்ட படம் இராதென்றும், நான் இதை அவர்களிடம் கொடுக்கலாமென்றும் எண்ணியே இதை நான் வாங்கினேன். வாங்கிக் கொண்டு அப்பால் போனவுடன்தான் எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. கிழவர் இறந்த பிறகு அவருடைய இளைய சம்சாரம் முதலியோர் ஒரு மாசகாலம் வரையில் இங்கே இருந்து எல்லாச் சொத்துக்களையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டு இரவோடிரவாய்ப் புறப்பட்டு எவருக்கும் தெரியாமல் எங்கேயோ போய்விட்டதாக நீங்கள் சொன்னது பின்னால்தான் நினைவுக்கு வந்தது. நான் கொண்ட கருத்து பலிதமடைய வகையில்லாமல் போய்விட்டதே என்றும், இதை வைத்துக் கொண்டு என்ன செய்கிறதென்றும் யோசனை செய்தேன். கடைசியில் உங்களுடைய நினைவுதான் உண்டா யிற்று. ஏனென்றால் எனக்கு இந்த ஊரில் நீங்கள் ஒருவர்தான்