பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 189

ளோடெ ஆத்துமாவெ சுத்தப்படுத்தி, நம்மெப் படெச்ச ஆண்டவரோடெ பாதத்தடிக்குப் போயிச் சேருங்கன்னு சொல்லி அனுப்பறவன் இல்லியா சாமி நானு. நான் பொறந்து இத்தினி வருஷகாலமா அந்த மாதிரி எத்தினியோ மனிசரே அனுப்பிச்சி ருக்கறேனுங்க சாமீ. நீங்க சொல்ற மனிசரு இரண்டு வருசத்துக்கு மின்னெயா எறந்து போனாரு? அப்படியானா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கணுமுங்க, பெயரு தெரிஞ்சா சொல்லுங்க சாமீ! நானு கண்டுக்கறேன்.

திவான் சாமியார் : அந்த ஐயாவை குஞ்சிதயாத முதலியார் என்று கூப்பிடுவார்கள். அவர்களுக்கு முதலில் ஜவுளிக்கடைகூட இருந்தது - என்றார்.

அந்தப் பெயரைக்கேட்ட உடனே காத்தான் திடுக்கிட்டு மெய்ம்மறந்துபோய் ஆவேசங் கொண்டவன்போலத் துள்ளிக் குதித்தான். அவனது முகம் உடனே மாறுபட்டது. அவனது மனத்தில் இன்பமோ துன்பமோ என்று கூற இயலாத பலவித உணர்ச்சிகள் பொங்கியெழுந்தன. தான் சொல்வது இன்ன தென்பதை உணராதவனாய் அவன், “சாமி அந்த எசமான் இப்ப எந்த ஊருலே இருக்கறாரு சாமீ. அவுங்க சொகந்தானுங்களா?” என்றான்.

உடனே திவான் சாமியார் நிரம்பவும் வியப்படைந்தவர் போல நடித்து, “என்ன காத்தான் நீ இப்படிக் கேட்கிறாயே! அவர் இரண்டு வருஷ காலத்திற்குமுன் இறந்துபோனதாக பேசிக் கொண்டிருக்கிறோம். நீ அவருடைய இப்போதைய rேம சமாசாரத்தை விசாரிக்கிறாயே!” என்றார்.

காத்தான் உடனே தனது தவறை உணர்ந்துகொண்டான். ஆனாலும் தான் அதை மாற்றிப் பொய் பேச வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாகவில்லை. “ஒங்கெளெப் பாத்தா சாச்சாத்துப் பரமசிவன் கணக்கா இருக்குதுங்க, ஒங்ககிட்டப் பொய் சொன்னா நானு நரகத்துக்குத்தான் போய் சேரணுமுங்க. நீங்க பேசினத்துலே இருந்து அவுங்களம் நீங்களம் நேசமின்னும், அவுங்களோடெ நெச சங்கதி ஓங்களுக்குத் தெரிஞ்சிருக்கு மின்னும், ஒங்களெ இங்கிட்டு அவுரே அனுப்பிச்சிருப் பாருன்னும் நானு எண்ணி அந்த மாதிரி பேசிப் புட்டேனுங்க.