பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 179

பட்ட பணத்தை என்னிடம் பெற்றுக்கொண்டு, சொத்துக்களை என்னிடம் உடனே ஒப்புவித்து விட வேண்டுமென்றும், திருவடமருதூரிலுள்ள ஜனங்களோ வேறு எந்த ஊர் ஜனங்களோ எனக்கு தேகத் துன்பமோ அல்லது மான ஹானியோ உண்டாக் காமல் இருப்பதற்குச் சகலமான போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளும் எனக்குத் தேவையானால் தக்க பந்தோபஸ்து செய்துகொடுக்க வேண்டுமென்றும், மாட்சிமை தங்கிய துரைத் தனத்தார் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் மிகுந்த வணக்கத்துடன் பிரார்த்திக்கிறேன்.” - என்று எழுதப்பட்ட மனுவை திவான் சாமியார் நல்ல காகிதத்தில் அச்சியற்றி அதைத் தபால் கச்சேரியில் ரிஜிஸ்டர் செய்து சென்னை கவர்னர் துரைக்கு இரண்டொரு தினங்களில் அனுப்பி வைத்தார்.

அவ்வாறு தாம் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று குஞ்சிதபாத முதலியார் கனவிலும் நினைத்த வரன்று. ஆதலால் திவான் சாமியார் அவ்வாறு செய்தது குஞ்சிதபாத முதலியாருக்கு மிகுந்த வியப்பையும், அளவற்ற மகிழ்ச்சியையும், மனோதிடத்தையும் உண்டாக்கியதன்றி, தாம் இழந்த தமது குடும்ப வாழ்க்கையும் தமக்கு வெகு சீக்கிரத்தில் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையையும் அவர் கொள்ளச் செய்தது. அதுவுமன்றி, தமது மனைவியைத் தேடிக் கண்டுபிடிப் பதோடு மாத்திரம் நின்றுவிடாமல், தமது மருமகளான காந்திமதியம்மாள், ராஜா பகதூர் ஆகிய இவருரையும் தேடிப் பிடித்துத் தமது சொத்து முழுதையும் முடிவில் அவர்களிடம் ஒப்புவித்தாலன்றி தமது ஆன்மா சாந்தியடையாதென்றும் அவர் அடிக்கடி திவான் சாமியாரிடம் கூறிக்கொண்டிருந்தார்.

அவர்களால் எழுதப்பட்ட மனுவின்மேல் சென்னை துரைத் தனத்தார் என்னவிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொண் டிருக்கிறார்களென்பது சுமார் இருபது தினங்கள் வரையில் தெரியாமல் இருந்தது. அதுவரையில் திவான் சாமியார் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வோர் ஊராகச் சென்று தமது இளைய தாய் எந்த ஊரிலாகிலும் இருக்கிறாளா வென்பதைப் பற்றித் துப்பு விசாரிப்பதும் திரும்பி வருவதுமாய் இருந்தார்.