பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84 செளந்தர கோகிலம்

மூன்றாவது நாள் வந்தது. திருவடமருதூரிலிருந்து வந்து, கலெக்டர் கச்சேரியின் வாசலில் காத்திருந்த மனிதர்கள் எல்லோரும் ஒருவரையொருவர் கண்டு வியப்படைந்து, நீ எதற்காக வந்திருக்கிறாய்? எனக்கும் சம்மன் வந்திருக்கிறது. விஷயம் இன்னதென்று உனக்குத் தெரியுமா?” என்று ஒருவரை யொருவர் கேட்டுக் கொண்டு, விஷயம் இன்னதென்பதைச் சிறிதும் யூகிக்க மாட்டாதவராய்த் தத்தளித்திருந்தனர்.

அன்றைய தினம் காலை சுமார் எட்டு மணிக்கே தமது போஜனத்தை முடித்துக்கொண்ட கலெக்டர் எவருக்கும் தெரியாத படி தமது மோட்டார் வண்டியில் உட்கார்ந்து, அந்த ஊருக்கு ஆறு மைல் வடக்கில் இருந்த திருவையாற்றையடைந்து, குஞ்சிதபாத முதலியார் கொடுத்திருந்த விலாசப்படி விசாரித்து அவரது ஜாகையை அடைந்து, அவரைக்கண்டு, அவரது மனுவைப்பற்றிய விசாரணை அன்றைய தினம் பகல் பதினொரு மணிக்குத் தஞ்சை கலெக்டரின் முன்னிலையில் நடக்கப் போகிறதென்றும், அது ரகளியமாக நடப்பதால், அவரை ரகஸியமாய் அழைத்து வரும்படி தம்மைக் கலெக்டர் அனுப்பி இருப்பதாகவும் கூறி, உடனே புறப்பட்டுத் தம்முடன் மோட்டார் வண்டியில் உட்கார்ந்து வரும்படி அழைக்க, அது திவான் சாமியார் இல்லாத சமயமாதலால் குஞ்சிதடாத முதலியார் தமது வீட்டை வேலைக்காரர்களிடத்தில் ஒப்பித்துவிட்டு உடனே புறப்பட்டு வந்து மோட்டாரில் உட்கார்ந்து கொண்டார். வண்டி புறப்பட்டு அரை நாழிகை காலத்தில் தஞ்சை கலெக்டரது கச்சேரியை அடைந்தது. கட்சிக்காரர்களுக்குத் தெரியாதபடி கலெக்டர் தமது கச்சேரிக்குள் போகும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேகமான வழியாக நாடார் குஞ்சிதபாத முதலியாரை மேன்மாடத்திற்கு அழைத்துச் சென்று அவ்விடத்தில் பிரமாண்டமான இடத்தில் உன்னதமான பீடத்தின்மேல் போடப்பட்டிருந்த தமது ஆசனத்தண்டை போய்ச் சேர்ந்தார்.

அவ்விடத்தில் காத்திருந்த சிரஸ்ததார், குமாஸ்தாக்கள், டபேதார். டலாயத்துகள் முதலியோர் கலெக்டர் கலெக்டர்’ என்று சொல்லிக்கொண்டு சரேலென்று எழுந்து ஒதுங்கி நின்று பயபக்தி விநயத்தோடு நாடாரை நோக்கி சலாம் செய்ய, அவரும்