பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15-ஆவது அதிகாரம் காணிக்குற்றம் கோடிக் கேடுபிரயாச்சித்தம்

-வது அதிகாரத்தின் முடிவில் குறிக்கப்பட்ட

ஆ தினத்தன்று இரவில், புரசைப்பாக்கம் பூஞ்சோலையம்மாளது பங்களாவில் நிகழ்ந்த

சம்பவங்களை இனி நாம் விவரிப்போம். அந்த பங்களா முன்னரே கூறப்பட்டுள்ளபடி

பிரம்மாண்டமான பூஞ்சோலை முதலியவை களைக் கொண்ட விசாலமான கட்டிடம் ஆகையால், அவைகளைக் கவனித்து நல்ல நிலைமையில் வைத்திருப்பதற்காகவும், அவர்களது வண்டிகளை ஒட்டவும் குதிரைகளைப் போவிக்கவும், அவர்களுக்குச் சமையல் செய்யவும், இன்னும் மற்றுமுள்ள எண்ணிறந்த குற்றேவல்களை நிறைவேற்றி வைக்கவும் சுமார் இருபத்தைந்து சிப்பந்திகள் நியமிக்கப்பட்டி ருந்தனர். அவர்களுள் மூவர் நால்வர் தவிர, மற்ற எல்லோரும் அப்பொழுது அந்த பங்களாவிலேயே இருந்தனர். அவர்கள் எல்லோரையும் பூஞ்சோலையம்மாள் நிரம்பவும் பகrமாகவும் பெருந்தன்மையாகவும் நடத்தி வந்தனள். ஆதலால், எல்லோரும் அந்த அம்மாளைத் தமது சொந்தத் தாயைப் போல மதித்து அவளிடம் மிகுந்த சலுகையும் உரிமையும் பாராட்டி வந்ததன்றி அந்த அம்மாள் தமக்கு எவ்வித கெடுதலும் செய்யமாட்டாள் என்ற நம்பிக்கையையும் கொண்டவர்களாய் இருந்தனர். கோகிலாம்பாள் சகலமான சிப்பந்திகளையும் நடத்தி பங்களா வின் காரியங்களையெல்லாம் ஒழுங்காய்ச் செய்வித்த முக்கிய சூத்திரதாரியாதலால், அவள் அவர்களிடம் மாறிமாறி நயமாக வும், கண்டிப்பாகவும் இருந்து வந்தாள். வேலை வாங்கும் விஷயத்தில் அந்த மடந்தை நிரம்பவும் கண்டிப்பாக இருந்தனள்,