பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 செளந்தர கோகிலம்

அப்படிச் செய்தால், நான் இவர்களை நிரம்பவும் அகெளரதை யாக நடத்துகிற மாதிரியாகும் என்பது எனக்குத் தெரியாதா அதுவுமன்றி இங்கே இது அசந்தர்ப்ப சமயம் என்பதை நான் அறியாதவனா? நான் இன்று காலை பத்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கச்சேரிக்குப் போய் மாலை ஏழரை மணிக்கே வீட்டுக்குத் திரும்பி வந்தேன். என் கச்சேரியில் இருக்கிறவர்கள் எல்லோரும் அதை மெய்ப்பிப்பார்கள். இந்த அம்மாள் என்ன சொல்லுகிறார்கள்? நான் இன்று வீட்டிலிருந்த தாகவா சொல்லுகிறார்கள்?’ என்றார்.

செளந்தரவல்லி, ‘இல்லை காலையில் கோகிலாம்பாள் அங்கே வந்ததாகச் சொல்லும் சமயத்தில் நீங்கள் வீட்டில் இருந்தீர்களோ இல்லையோ என்பதை அம்மாள் சொல்லக் கூடவில்லை. மத்தியானம் நாலரை மணி சமயத்துக்கு அம்மாள் உங்களுடைய வீட்டுக்கு வந்ததாகவும், உங்கள் சம்சாரம் மாத்திரம் இருந்து, தகவல் தெரிவித்ததாகவும் சொன்னார்கள்’ என்றாள்.

பொன்னுரங்க முதலியார், தமக்குப் பின்னால் நின்ற தமது மனைவியை நோக்கி, “என்ன மலைப்புளுகு இது பார்த்தாயா? இன்று காலையிலாவது மத்தியானமாவது இந்த வீட்டுப் பெண் பிள்ளைகள் யாராவது நம்முடைய வீட்டுக்கு வந்தார்களா? நீயே எல்லாருக்கும் முன்னால் சொல்” என்றார்.

உடனே அம்மாள், ‘இவர்கள் யாரும் எங்களுடைய வீட்டுக்கு இன்றைய தினமாவது வேறு என்றைய தினமாவது வந்ததே இல்லை. இவர்கள் வேறு யாரைக் குறிக்கிறார்களோ என்னவோ! இதோ நான் பூஞ்சோலையம்மாளிடம் போய் நேரில் கேட்கிறேன்” என்று கூறிய வண்ணம் விசையாக நடந்து அந்த அம்மாள் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போய், ‘அம்மா அம்மா கண்ணைத் திறந்து என்னைப் பாருங்கள்! எங்கள் வீட்டுக்கு நீங்கள் இன்று வந்தீர்களா? என் முகத்தை நீங்கள் பார்த்தீர்களா? என்னோடு நீங்கள் பேசினர்களா? சுவாமி சாட்சியாகச் சொல்லுங்கள். உங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. யார் பொய் சொன்னாலும் சரி, அவர்களுடைய தலையில் உடனே இடி