பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரது சம்பாஷணையும் மற்ற எவருக்கும் தெரியாதபடி நிரம்பவும் தணிவான குரலில் ஒரே நிமிஷத்தில் நடந்தேறியது.

உடனே செளந்தரவல்லி தனது அக்காளைப் பற்றி அதற்கு முன் எவ்விதமான தகவலும் தெரிந்து கொள்ளாதவள் போலவும், அவள் அன்றைய காலையிலிருந்து காணாமல் போயிருந்தவள் வந்துவிட்டதாக அப்பொழுதுதான் முதன் முதலில் தான் தெரிந்து கொள்ளுகிறவள் போல திடுக்கிட்டு மிகுந்த களிப்பும் ஆனந்தமும் பெருத்த ஆவேசமும் கொண்டு தன்னை மறந்தவள் போலவும் நடித்து எல்லோரையும் பார்த்து, ‘கோகிலா வந்துவிட்டாள் கோகிலா வந்து விட்டாள்” என்று உரக்கக் கூவினாள்.

அதைக் கேட்ட ஜனங்களெல்லோரும் திடுக்கிட்டு மிகுந்த ஆவலும் ஆவேசமும் களிப்பும் அடைந்து, “எங்கே? எங்கே?” என்று நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பி ஆசையோடு பார்த்தனர். அப்பொழுது அரை உணர்வோடிருந்த பூஞ்சோலை யம்மாளுக்கு அந்த வார்த்தைகள் கனவுபோலத் தோன்றின. கோகிலாம்பாள் வந்துவிட்டாள் என்ற செய்தி பூஞ்சோலை யம்மாளின் மனத்தில் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் உண்டாக்கின. ஆனாலும், தான் கூறிய வரலாற்றிற்கு மாறாக அவள் தாறுமாறாக உளறி, பந்து ஜனங்களுக்கு முன் இன்னும் அதிகரித்த அவமானத்தையும் தலை குனிவையும் உண்டாக்கி விடப் போகிறாளே என்ற அச்சமே பெரிதாக எழுந்தமையால், அந்த அம்மாளினது மன நிலைமை முன்னிலும் பன்மடங்கு கேவலமாக மாறிவிட்டது. காலையிலிருந்து காணாமல் போய் அருமையாய்த் திரும்பி வந்திருக்கும் கோகிலாம்பாளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் இல்லாமல் போயிற்று. ஆகவே, அந்த அம்மாள் தனது நெற்றியைப் பிடித்துக்கொண்டு குன்றிப்போய் அப்படியே உட்கார்ந்து போய்விட்டாள்.

பந்து ஜனங்கள், ‘கோகிலாம்பாள் எங்கே?’ என்று ஆவலுடன் கேட்டதற்கு மறுமொழியாக செளந்தரவல்லி, “அவள் இப்போதுதான் வந்தாளாம்; இங்கே ஜனக் கும்பல் அதிக மாயிருக்கிறதென்று வேலைக்காரர் சொன்னதைக் கேட்டு பக்கத் திலுள்ள அறைக்குள் போயிருக்கிறாளாம். நாமெல்லோரும்