பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 249

தெரிந்து கொள்ள மாட்டாதவளாய்த் தத்தளித்திருந்ததன்றி, பங்களாவில் அப்பொழுது வேறு யார் வந்திருப்பார்களென்றும், அவர்கள் யாருடன் பேசிக் கொண்டிருப்பார்களென்றும் பலவாறு சிந்தனை செய்த வண்ணம் ஆவலே வடிவாக விற்றிருந்தாள்.

அவள் இருந்த அறைக்குச் செளந்தரவல்லி போய்ச் சேர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வேலைக்காரிகளும் அந்த அறைக்குள் நுழைந்தனர். செளந்தரவல்லி தனது அக்காள் காலையிலிருந்து காணாமல் போனதைப் பற்றி மிகுந்த கலக்கமும் கவலையும் அடைந்து தவித்திருந்தவள் போலவும், அவள் திரும்பி வந்ததைக் கேட்டு அளவற்ற சந்தோஷமடைந்து அவளைப் பார்க்க ஆசைகொண்டு ஓடிவந்தவள் போலவும் காட்டிக்கொண்டு, ‘அக்கா அக்கா வந்தாயா! உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போயிருப்பார்களோ என்று நாங்களெல்லோரும் நினைத்து இந்நேரம் தாமரை இலைத் தண்ணிர் போலத் தத்தளித்துப் போய் விட்டோம். நல்ல வேளையாக வந்து சேர்ந்தாயே! உன்னை யாரம்மா அழைத்துக் கொண்டு வந்தார்கள்? நீ தனியாகவா வந்தாய்? இப்போது எங்கிருந்து வந்தாய்?’ என்றாள்.

அவளுக்குப் பக்கத்திலிருந்த சிப்பந்திகள் கோகிலாம்பாள் திரும்பி வந்ததைக் குறித்து மனப்பூர்த்தியான மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து இனிமையாய் மலர்ந்த முகத்தினராய்க் கோகிலாம்பாளை நிரம்பவும் பrத்தோடும் பிரேமையோடும் பார்த்தபடி நின்றனர். ஆனாலும், செளந்தரவல்லி தனது அக்காளிடம் சம்பாவித்துக் கொண்டிருக்கையில், தாம் குறுக் கிட்டுப் பேசினால் இளையவளுக்குத் தம்மீது கோபம் உண்டா குமோ வென்று அஞ்சி மெளனமாகவே நின்றனர். ஆயினும், அவர்களது அகத்தின் நிலைமை முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அவர்கள் எல்லோரையும் கண்ட கோகிலாம்பாள் திடுக்கிட்டு வெட்கத்தினால் குன்றிப் போனாள். தனது வரலாற்றை அவர்கள் எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப் பார்களோ என்ற சந்தேகம் அந்தப் பெண்மணியை வதைக்கத் தொடங்கியது. ஆயினும் செளந்தரவல்லி கேட்ட கேள்விகள்