பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 செளந்தர கோகிலம்

தமது பங்களாவிற்குக் கொணர்ந்து தேற்றிக் காப்பாற்றியது வரையில் விரிவாகவும் தெளிவாகவும் வளர்க்காமலும் எடுத்துரைத்தார்.

அதைக் கேட்கவே அங்கிருந்த ஜனங்களெல்லோரும் முற்றிலும் பிரமித்து ஸ்தம்பித்து ஒய்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டனர்.

நாலைந்து சிப்பாயிகள் தாழைக்காட்டில் தனிமையில் கோகிலாம்பாளை மானபங்கப்படுத்த எத்தனித்ததை அப்பொழுதே கண்ணிற்கெதிரில் காண்பவர்போல அவர்களெல்லோரும் கிடுகிடுத்து நடுங்கிப் போயினர். அந்த மகா பயங்கரமான காட்சி அவர்களது மனத்தைக் கலக்கியதைவிட, அவள் தனிமையில் போலீஸ் இன்ஸ்பெக்டரது மாளிகைக்குப் பலகார மூட்டையுடன் போய் வெகுநேரம் இருந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வந்தாளென்ற மகா விபரீதமான செய்தி அவர்களது புத்தி முற்றிலும் மயங்கித் தெறித்துப் போகும்படி செய்துவிட்டது. கோகிலாம்பாள் அப்படியும் நடந்து கொள்வாளா என்ற மலைப்பும் சந்தேகமும் பிரமாதமாக எழுந்தன. சுந்தரமூர்த்தி முதலியார் கோகிலாம்பாளுக்கு முன்னால் வெளியிட்டதை அவள் மறுக்காமல் மெளனமாக நின்றதிலிருந்து, அது உண்மையான வரலாறாகத்தான் இருக்க வேண்டுமென்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர். அதற்கு அநுசரணையாகத் தாயும் மகளும் உண்மையை வெளியிட வெட்கி, மகள் அன்று காலையில் சொந்தக்காரருடைய வீட்டிற்குப் போனாளென்று பொய்யான தகவல் கூறியதும், சுந்தரமூர்த்தி முதலியார் கூறிய வரலாறு உண்மையானதென்பதை ஊர்ஜிதப்படுத்தியது. ஆகவே, ஜனங்கள் எல்லோரும் அந்த வெட்கக்கேடான நிலைமையில் தாம் என்ன சொல்வதென்பதை அறியாதவராய்ச் சிறிதுநேரம் வியப்பே வடிவாக மாறி ஒய்ந்து மெளனமாக நின்றனர். அந்த வரலாற்றைப் பூஞ்சோலையம்மாளும் கேட்டுக் கொண்டே இருந்தமையால், தனது குமாரத்தி இன்ஸ்பெக்டரது வீட்டிற்கு துன்பமார்க்கமான உத்தேசத்தோடு சென்றாள் என்று எல்லோரும் சம்சயம் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டுப் போனதை உணர்ந்தும், பிறகு கோகிலாம்பாளுக்குச் சிப்பாயிகளால் நேரிட்ட மகா பயங்கரமான அபாயத்தைக் கேட்டும் அந்த அம்மாள் சகிக்க வொண்ணாத அவமானமும் விசனமும் கலக்கமும் மனவேதனை