பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் - 27

பின்னுமாய் அவர்கள் மூவரும் பறந்து சென்று பக்கத்திலிருந்த தாழைப் புதரைச் சுற்றிக் கொண்டு அப்பால் செல்ல, அவ் விடத்தில் நிரம்பவும் விசாலமாகவும் அடர்த்தியாகவும் காணப் பட்ட தாழைச் செடிகளின் இடையிடையில் வழிகளும், மணல் மேடுகளும் காணப்பட்டன. அவைகளுக்குள் நுழைந்த அவர்கள் மூவரும் சிறிது தூரம் புதருக்குள் செல்ல, நாற்புறங்களிலும் புதர்களால் சூழப்பட்டுத் தீவுபோலக் காணப்பட்ட ஒரு மண் திட்டின்மேல் ஐந்து முரட்டு மனிதர்கள் காணப்பட்டனர். அவர்களுள் நால்வர் இராணுவ இலாகாவைச் சேர்ந்த இந்திய சிப்பாயிகள் போல உடை தரித்திருந்தனர். ஐந்தாவது மனிதன் வண்டியோட்டும் காசாரிபோல நிஜார் சட்டை தலைப்பாகை முதலியவற்றை அணிந்தவனாய் நின்றான். அவர்கள் ஐவரும் கோகிலாம்பாளைப் பிடித்துக் கைகளையும் கால்களையும் கட்டவும், அவளது வாயில் துணிப்பந்தைச் சொருகவும் முயன்றுகொண்டிருந்தனர். ஆனால் கோகிலாம்பாள் அவர்களது கட்டிலடங்காமல் துள்ளிக் குதித்துத் தத்தளித்து அவர்கள் தன்னைத் தொடுவதற்கு இடங்கொடாமல் தன்னால் இயன்ற வரையில் தடுத்துக்கொண்டும் கூச்சலிட முயன்றுகொண்டும் இருந்தாள். பார்வைக்கு முரடர்களாக இருந்த அந்த நான்கு சிப்பாயிகளும் காசாரியும் நன்றாய்க் குடித்து வெறிகொண்டு இருந்தவர் போலக் காணப்பட்டமையால், அவர்களது உடம்பும், கைகளும், கால்களும் அவர்களது கட்டுக்கடங்காமல் தாறுமாறாய்ச் சென்றன. ஆகவே, கோகிலாம்பாள் நிரம்பவும் பலமாகத் திமிறி அவர்களது துராகிருதச் செய்கைக்கு வசப் படாமல் அதுவரையில் தப்பி இருந்தாள். அந்தச் சமயத்தில் அவ்விடத்தை அடைந்த சுந்தரமூர்த்தி முதலியார், ‘'அடே மினியா ஆள்கள் அதோ இருக்கிறார்கள்; எல்லோரையும் இவ்விடத்திலேயே சுட்டுத் தள்ளிவிடுகிறேன்’ என்று கூச்சலிட்டுக் கூறி தமது கையிலிருந்த பிஸ்டலின் விசையை அழுத்தி ஆகாயத்தைப் பார்த்து ஒரு வெடிபோட, உடனே துப்பாக்கி படாரென்று வெடித்து பெருத்த ஒசையையும் புகைப் படலத்தையும் உண்டாக்கியது. அதைக் கண்டு திடுக்கிட்டு மருண்டு நடுநடுங்கிப்போன அந்த முரடர்கள் ஐவரும், “அடே! ஆள்கள் வருகிறார்களடா! அவர்களிடம் துப்பாக்கிக்கூட