பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 31

கீழே இறங்கினார்கள். சுந்தரமூர்த்தி முதலியார் உடனே உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு வேலைக்காரிகளையும் நான்கு வேலைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு விரைவாக வண்டியண்டை வந்தார். வேலைக்காரர்கள் ஒரு பெரிய ஸோபாவை எடுத்துக் கொண்டு வந்தனர். பெண்பிள்ளைகள் பெட்டி வண்டிக்குள் ஏறி, அப்போதும் மயங்கிப் படுத்திருந்த கோகிலாம்பாளை மெதுவாகத் தூக்கி வெளியில் கொணர்ந்து பக்கத்தில் அணைத்து வைக்கப்பட்டிருந்த ஸோபாவில் விட, உடனே வேலைக்காரர்கள் ஸோபாவோடு நமது கோகிலாம்பாளைத் தூக்கி எடுத்துக்கொண்டு பங்களாக் கட்டிடத்திற்குள் சென்று வசதியான ஒர் அறையில் ஸோபாவோடு அவளை வைத்தனர். உடனே ஸ்திரீகள் இருவரும் அங்குமிங்கும் ஒடி அவளது மயக்கத்தைப் போக்குவதற்குரிய பொருள்களைக் கொணர்ந்து பல வகையில் சிகிச்சைகள் செய்யத் தொடங்கினர். சுந்தரமூர்த்தி முதலியார் தாம் மாத்திரம் ஸ்திரீகளோடு அந்த அறையில் இருந்துகொண்டு மற்ற ஆண்மக்கள் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டார். வேலைக்காரிகள் இருவரும் நமது கோகிலாம்பாளுக்குத் தண்ணிர் கொடுத்து விசிறியால் சிறிது நேரம் வீசிக்கொண்டே இருக்க, அப்போதே துரங்கி விழிப்பவள் போல அந்த மின்னற்கொடியாள் தனது கண்களைத் திறந்து பார்த்து மருளமருள விழித்தாள். கடற்கரையில் மணற்பரப்பில் சிப்பாயிகளிடையில் இருந்த காலத்தில் சுந்தரமூர்த்தி முதலியாரும் மற்றும் சிலரும் திடீரென்று தோன்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களை விரட்ட எத்தனித்ததோடு அவளது உணர்வு போய்விட்டது. ஆகையால் அவள் தனது கண்களைத் திறந்து பார்த்தவுடன், அதே நினைவு அவளுக்குத் தோன்றியது. தான் அப்போதும் மணல் பரப்பில் பயங்கரமான நிலைமையில் இருப்பதாகவே அவள் எண்ணிக்கொண்டு மிகுந்த திகிலும் நடுக்கமும் அடைந்து இரண்டொரு தரம் தனது கண்களை மூடிமூடித் திறந்து பார்த்தாள். இடையில் தான் தனது அபாயத்திலிருந்து தப்பிப் பத்திரமான வேறு இடத்தில் வந்திருப்பதை உணராம்ல் அவள் அஞ்சி நடுங்குகிறாளென்று யூகித்துக்கொண்ட சுந்தரமூர்த்தி முதலியார் சிறிது தூரத்தில் மரியாதையாக நின்ற வண்ணம் மிகுந்த வாத்ஸல்யமும் மதிப்பும்