பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 51

சொன்னிர்கள். இப்போது அந்த ஏற்பாடு ரத்தாகிப் போன மாதிரியே இருப்பதால், அடுத்தபடியாக நீ என்னையே கட்டிக் கொள்ள இணங்கவேண்டியது நியாயம். ஆகையால், இந்தச் சமயத்தில் நான் இந்தப் பிரஸ்தாபத்தை உன்னிடம் செய்ததேனேயன்றி வேறொன்றும் இல்லை. இப்போது உங்கள் மனநிலைமை சரியாக இல்லையென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நீயும் நானும் தனிமையில் பேசி, ஒருவருக்கொருவர் நம்முடைய அந்தரங்கமான எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளியிட்டுக் கொள்வதற்குத் தகுந்த சந்தர்ப்பம் இனி வாய்க்குமோ என்னவோ தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி நான் பேசுவது உனக்கு ஒரளவு துன்பகரமாக இருந்தாலும், அதை நீ பொருட்படுத்த மாட்டாய் என்று நம்பியே நான் இதைக் குறித்துப் பேச ஆரம்பித்தேன். அதுவுமன்றி, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணபிரான் முதலியாரை விடுவிக்கவும், அவருடைய தாயாரைத் தேடிப் பிடிக்கவும் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆனாலும், அவரை நீ கட்டிக்கொள்வதா இல்லையா என்ற விஷயத்தை நாம் இப்போது தீர்மானித்துக் கொண்டால்தான். அதற்குத் தகுந்தபடி நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நிச்சயித்துக் கொள்ளலாம். அவர்கள் பேரில் ஏற்பட்டிருக்கும் அவதூறு நிஜமாக முடிந்தாலும் பொய்யாக முடிந்தாலும் எந்த வகையிலும் நீ அவரையே கட்டிக்கொள்வது என்கிற உறுதி உனக்கு இருக்குமானால், நாம் அவருக்குச் செய்கிற உதவி ஒரு மாதிரியாக இருக்கும்; இனி நீ அவரைக் கட்டிக்கொள்வதில்லை, பரோபகாரத்தையும் பழைய சிநேகிதத்தையும் கருதி மாத்திரம் நாம் அவருக்கு உதவி செய்கிறதென்றால், அப்போது உதவி வேறு மாதிரியாக இருக்கும். நாம் நம்முடைய உறவினருக்குச் செய்யும் உதவியும், ஜீவகாருண்யத்தை உத்தேசித்து அந்நியருக்குச் செய்யும் உதவியும், ஒன்றுபோலவே இருக்குமா? ஒரு நாளும் இல்லை. எப்பேர்ப்பட்ட மனிதர்களாயிருந்தாலும், இரண்டு வகையிலும் வித்தியாசம் அவசியம் இருக்கும். ஆகையால், அவருக்கும் நமக்கும் இனி ஏற்படப் போகும் பாந்தவ்வியம் எவ்வளவு என்பதை நாம் தீர்மானிப்பதற்கு இதைத் தவிர வேறு தகுதியான