பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 செளந்தர கோகிலம்

இருக்கிறாள். அவளுடைய பிரியம் முழுதும் இவ்விடத்திலேயே வந்து லயித்துப்போய்விட்டது. நான் எப்படி என் கலியாணம் முடிந்து போனதாக எண்ணிக்கொண்டிருக்கிறேனோ, அது போலவே அவளும் தன்னுடைய கலியாணம் முடிந்துபோன தாகவே எண்ணிக்கொண்டிருக்கிறாள். இனி ஈசுவரன் பார்த்து அவளுடைய மனசை மாற்றினாலன்றி மற்ற எதனாலும் அவளுடைய மனம் மாறாது போலிருக்கிறது. தாங்கள் ஒருவேளை அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டப்படாமல், வேறே பெண்ணைக் கட்டிக்கொள்ள எண்ணினாலும், வீட்டிலுள்ள பெரியவர்களான என் தாயார் முதலிய நாங்கள் எல்லோரும் உங்களுடைய காலில் விழுந்தாவது உங்களை நயந்து இணங்கச் செய்யவேண்டிய நிலைமையில் இருக்கிறோம். அப்படி இருக்க, நானே அவளுக்குப் போட்டியாக வருவதென்றால், அது தெய்வத்திற்குச் சம்மதியாகாது. அவள் வயிறெரிந்து எங்கள் எல்லோரையும் சபிக்கத் தொடங்குவாள். ஆனால் தெய்வச் செயலாய், தங்கள் மனம் என் விஷயத்தில் மாத்திரம் சபலிக்கிறதேயன்றி, தாங்கள் வேறு யாரையும் கட்டிக்கொள்ள எண்ணவில்லையென்பது பிரத்தியகrமாகத் தெரிகிறது. ஆகையால் தாங்கள் என்மேல் கொண்டுள்ள எண்ணத்தைத் தயவு செய்து என் தங்கையின்மேல் மாற்றிக்கொள்ள வேண்டுமாய் நான் தங்கள் காலில் விழுந்து வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளுகிறேன். கடைசியில், அவளுக்கும் எனக்கும் அதிக பேதம் ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் இரட்டை யாய்ப் பிறந்தவர்கள். இரண்டுபேரும் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருக்கிறோம். எங்களோடு எப்போதும் நெருங்கிப் பழகுகிறவர்கள்கூட எங்களுடைய அடையாளத்தைத் தெரிந்து கொள்ளமாட்டாமல் ஒருவரை ஒருவராய்த் தப்பாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். அப்படி இருக்க, தாங்கள் மாத்திரம் எதைக் கொண்டு எங்கள் இருவருக்குள்ளும் ஏதோ பெரிய தாரதம்மியம் இருப்பதாக எண்ணி இப்படிப் பாரபட்சமாக நடந்து கொள்ளுகிறீர்களோ தெரியவில்லை. அவள் அறியாத குழந்தை; பரமஸாது; மகா பெருந்தன்மையான குணமும் நடத்தையும் உடையவள், தங்களிடம் பரம பிரீதியாக இப்பதன்றி, தங்களுக்காக உயிரை வேண்டுமானாலும் விடக்கூடிய மகா