பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 71

அவரைப்பற்றி இழிவாகத்தான் பேசிக்கொள்வார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். அதை நாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நம்முடைய காரியத்தை நம்முடைய யுக்தம்போலச் செய்துகொள்வோம். ஆகையால், உன் தங்கையின் கலியாணத்தையும் உன் கலியாணம் வரையில் நிறுத்திவைக்கவேண்டும். அந்த விஷயத்திற்கு உன் தங்கை ஒருவேளை இனங்காவிட்டாலும் நீயும் உன் தாயாரும் அவளிடம் ஹிதமாகப்பேசி, அவளுடைய மனசைச் சாந்தப் படுத்தி வையுங்கள். நாம் முதலில் அவருடைய வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவோம். அதுவுமன்றி, உன் மாமியாரையும் தேடிக் கண்டுபிடிப்போம்” என்று உண்மை போலவும் உருக்கமாகவும் கூறினார்.

அவரது சொற்கள் யாவும் உண்மையானவை என்றே நம்பிய நமது நற்குண மடந்தை அவர்மீது முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்த வாத்ஸல்யமும், மதிப்பும் கொண்டதன்றி, அவர் மேலான மனப்போக்குடைய உத்தம குணப் புருஷர் என்றும் உறுதியாக எண்ணிக்கொண்டு, மிகுந்த நன்றியறிதலும், மன இளக்கமும், நெகிழ்வும் காட்டி அவரை நோக்கி மிருதுவாகவும் வாஞ்சையோடும் பேசத்தொடங்கி, “அப்படியே தங்கள் இஷ்டம்போலவே நாங்கள் நடந்துகொள்ளுகிறோம். கொஞ்சம் பொறுத்தே என் தங்கையின் கலியாணத்தை வைத்துக் கொள்ளவேண்டுமென்று எனக்கும் என் தாயாருக்கும் எண்ணம். ஆயினும், உங்கள் இருவருக்கும் அந்த எண்ணம் எப்படி இருக்குமோ என்பதைக்கருதி நாங்கள் உங்கள் பிரியப்படி நடந்துகொள்வதென்று தீர்மானித்திருந்தோம். இப்போது தங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒத்துப்போய்விட்டன. நானும் என் தாயாரும் செளந்தரவல்லியம்மாளை எப்படியாவது சமாதானப் படுத்தி அவளும் இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படிச் செய்கிறோம். என்னால் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைக்கருதி, தாங்கள் ஒருவேளை என் தங்கையைக் கட்டிக்கொள்ள மறுத்துவிடுவீர்களோவென்று நாங்கள் நிரம்பவும் அஞ்சிக்கொண்டிருந்தோம். அந்த விஷயத்தில் தாங்கள். இப்போது உறுதிமொழி சொன்னதொன்றே போது