பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 77

பழிக்கு நாங்கள் ஆளாக வேண்டும். கோகிலாம்பாள் திரும்பி வீட்டுக்கு வருகிற வரையில் நான் இங்கே இருந்து, பிறகு எங்கள் ஜாகைக்குப் போய்விடுகிறேன். பிறகு நீ உன்னுடைய இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்’ என்றாள்.

உடனே செளந்தரவல்லியம்மாள், ‘அப்படியானால் நீ இன்று இராத்திரி இங்கே இருக்கப் போவதில்லையா? நேற்று இரவு நீ எனக்குச் செய்துகொடுத்த வாக்குறுதியை மறந்து போய் விட்டாயா? கற்பகவல்லி இந்தப் பங்களாவை விட்டுப் போய் விட்டால் இன்றிரவு சரியாகப் பத்துமணிக்கு உன் தமயனார் என்னிடம் வந்து பேசும்படி செய்வதாய் வாக்களித்தாயே. அதை நீ நிறைவேற்றி வைக்கப் போகிறதில்லையா? நேற்றிரவு முதல் என் மனம் படுகிறபாட்டை நான் எப்படித்தான் எடுத்துச் சொல்லப் போகிறேன். சாப்பாட்டைக் கண்டால் வேப்பங் காயைக் காண்பதுபோல எனக்கு உடனே குமட்டல் உண்டாகிறது. இரவு முழுதும் தூக்கம் என்பதே உண்டாக வில்லை. எப்போது பார்த்தாலும் எனக்கு உன் தமயனாருடைய நினைவே நினைவாக இருக்கிறது. சதாகாலமும் அவர்களுடைய வடிவம் என் கண்ணுக்கு முன் நிற்பதுபோலவே இருக்கிறது. இன்றைய பகல் எப்போது தொலையும் என்றும், இரவு எப்போது வருமென்றும் நினைத்து நான் நரக வேதனை அநுபவித்துத் துடிதுடித்துத் தவிக்கிறேன். சொன்ன சொல்லை மறந்து நீ இப்படிச்செய்வது தர்மமாகுமா? காலையில் உன் தமயனார் வந்திருந்தார்களே. அவர்கள் என்னைப்பற்றி ஏதாவது சொன்னார்களா? கற்பகவல்லியை நான் துரத்திவிட்ட விஷயத்தை நீ அவர்களிடம் சொன்னாயா? அவர்கள் இன்றிரவு பத்து மணிக்கு வருவதாகச் சொன்னார்களா? இப்போது அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள்?’ என்று கட்டிலடங்காத பெருத்த மனக்கிளர்ச்சியோடு பதைபதைத்துக் கூறினாள்.

உடனே புஷ்பாவதி, ‘அம்மா செளந்தரா உனக்கு நான் செய்து கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டேன் என்று நினைக்காதே. நாங்கள் இன்னமும் இவர்களுடைய சம்பந்தத்தை விட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டிருப்பது எதனால் தெரியுமா? உன் விஷயத்தில் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் பிரியம்