பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 87

கொண்டிருந்தாள். அவர் அன்று காலையில் மினியனுடன் மோட்டார் வண்டியில் உட்கார்ந்து கோகிலாம்பாளின் வண்டியைத் தொடர்ந்துபோனதுமுதல் கடைசியில் தாம் கோகிலாம்பாளைச் சிப்பாயிகளிடத்திலிருந்து மீட்டுத் தமது பங்களாவில் கொணர்ந்து வைத்திருந்தது வரையிலுள்ள வரலாறு முழுவதையும் சுருக்கமாக அவளிடம் கூறியதன்றி, பூஞ்சோலை யம்மாள் கோகிலாம்பாளைத் தேடிக்கொண்டு போயிருக்கிறாள் என்பதை அவள் கூறத்தெரிந்துகொண்டு முடிவாக அவளிடம் முக்கியமான ஒரு விஷயமும் கேட்டுக்கொண்டார். “புஷ்பாவதி! இந்த விவரத்தையெல்லாம் இப்போது நீ செளந்தரவல்லி முதலிய எவரிடத்திலும் வெளியிடவேண்டாம். நான் இப்போது ‘உன்னிடம் என்ன பேசினேனென்று அவர்கள் கேட்டால், நீ எப்போது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு இங்கே வருவாய் என்று நான் உன்னைக் கேட்டதாகவும், பூஞ்சோலையம்மாள் பங்களாவைவிட்டு எங்கேயோ போயிருப்பதாகவும், அவர்கள் திரும்பி வந்துசேர்ந்தவுடன் அவர்களைக்கேட்டுக்கொண்டு, அவர்கள் எப்போது போக அநுமதி கொடுக்கிறார்களோ அப்போது வருவதாய் நீ எனக்குச் சொன்னதாகவும் சொல்லி விடு. நான் இவ்விடத்தில் கோகிலாம்பாளுடன் நயமாகப்பேசி அவள் நம்முடைய ஏற்பாட்டுக்கு இணங்கும்படிச் சொல்லிப் பார்க்கிறேன். அவள் இனங்காவிட்டால், நான் உடனே அவளை வண்டியில் வைத்துக்கொண்டு மாலைக்குள் அங்கே வருகிறேன். அவள் நம்முடைய பிரியப்படி இணங்கிவராமல் கண்ணபிரானையே கட்டிக்கொள்ளப் போவதாய் ஒரே பிடிவாதமாய்ப் பேசினால் நான் மறுபடி டெலிபோனில் உன்னைக் கூப்பிடுகிறேன். நீ டெலிபோனுக்கு வரவேண்டாம். எப்படியாவது நீ தந்திரம் செய்து, உனக்குப் பதிலாக செளந்தர வல்லியம்மாள் டெலிபோனுக்கு வந்து என்னுடன் பேசும்படி செய்துவிடு. நான் உன்னிடம் உள் ரகளியத்தையெல்லாம் சொல்வதுபோல அவளிடம் நேரில் எல்லா விஷயங்களையும் சொல்லி அவளைத் தூண்டிவிடுகிறேன். அவள் மூலமாகவே அதன்பிறகு நாம் நம்முடைய காரியத்தைச் சாதித்துக் கொள்வோம்” என்று கூறி முடித்தார். அதைக்கேட்டு அப்படியே செய்வதாகக் கூறிவிட்டு புஷ்பாவதியம்மாள் டெலிபோனை