பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iCO செளந்தர கோகிலம்

கடைசியாய்த் தாங்கள் பரதேசிகளுக்கு நமஸ்காரம் செய்தவரையில் அந்த அம்மாள் தனது முகத்தை நிமிர்த்தாம லேயே தனது கணவனுக்குப் பின்னாலிருந்து எல்லாக் காரியங் களையும் செய்தாள். முடிவில் அவர்களது முகத்தைப் பார்த்து நமஸ்கரித்த காலத்தில் அந்த அம்மாள் உதவிச் சாமியாரது முகத்தைக் கவனித்துப் பார்த்து, ஒருவித உற்சாகமும், சந்தோஷ மும் அடைந்து, ‘சுவாமிகளை இதற்கு முன் ஒரு தடவை நாங்கள் தரிசித்திருக்கிறோம் போலிருக்கிறதே! தாங்கள் இந்தப் பக்கத்திற்கு வந்து வெகுகாலமாய்விட்டதே! இப்படித்தானா பராமுகமாயிருக்கிறது?’ என்றாள்.

அந்தப் பெண் கூறிய வார்த்தைகள் திவான் சாமியாருடைய கவனத்தையும் உடனே அவ்விடத்திற்குத் திருப்பியது. அவர் அந்த உத்தம சதிபதிகள் இருவரையும் ஆநந்தமாகக் கடாகரித்தார். உதவிச் சாமியாரிடம் அந்த அம்மாள் கூறிய சொற்களுக்கு அவர் வேறு எவ்வித மறுமொழியும் கூறாமல், திருவருளின் கிருபா நோக்கம் இதுவரையில் ஏற்படவில்லை, இப்போதுதான் ஏற்பட்டது. இன்று மகா மங்களகரமான சுபதினம். ஏனென்றால், நான் என் பரம குருவாக மதித்து வரும் இந்த மகாபுருஷருடன் இந்த இடத்துக்கு வரும்படியான பாக்கியத்தை நான் அடைந்தேன்’ என்றார். -

அதைக்கேட்ட பெண்மணி உடனே நமது திவான் சாமியாரது முகத்தை இரண்டொரு நிமிஷ நேரம் உற்று நோக்கினாள். நோக்கினவள் திடீரென்று சன்னதங் கொண்டவள் போல மாறித் தனது கையிலிருந்த குழந்தையைத் தவசிப் பிள்ளையிடம் கொடுத்துவிட்டுத் தனது கணவனைப் பார்த்து, “எஜமானே! இதோ வந்திருப்பது இன்னாதர் என்ற அடையாளம் தங்களுக்குத் தெரியவில்லையா? நமது குலதெய்வமல்லவா இன்று வந்து தரிசனம் கொடுக்கிறது. ஆ. செந்திலாண்டவனே! வெற்றிவேல் முருகா! இந்த ஏழைகளுக்கு இன்று எப்பேர்ப்பட்ட மகா பெரும் பாக்கியத்தை அளிக்கிறாயப்பனே! எஜமானே! இன்று சத்திரத்திற்குப் புறப்பட்டபோதே, கோவிலில் எம்பெருமானுடைய உச்சிக்கால மணியடித்ததைக் கண்டு இன்று நல்ல சகுனமாகியதென்று நான் சொன்னேனல்லவா பாருங்கள்