பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. செளந்தர கோகிலம்

பெருமையையெல்லாம் அவர்களிடம் சொல்வது அழகல்ல வென்று நினைத்து நாங்கள் rேமமாயிருக்கிறாம் என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு அவர்களுடைய சங்கதியைப்பற்றி பிரஸ்தாபிக்கத் தொடங்கி, நாங்கள் திருவனந்தபுரத்திற்குப் போய் விசாரித்துக் தெரிந்து கொண்ட தகவல்களையும், அதன்மேல் அந்த விசனத்தைத் தாங்கமாட்டாமல், திருவடமருதூருக்கு அப்போது போய்க்கொண்டிருப்பதாகவும், நாங்கள் போன காரியம் நடுவழியிலேயே கைகூடிவிட்டதாகவும் நான் சொன்னேன். அதைக் கேட்கவே, அம்மாளுக்கு விசனம் பொங்கிப் போய்விட்டது. அவர்கள் என்னைக் கட்டிக்கொண்டு கோவென்று கதறி அழத்தொடங்கிவிட்டார்கள். நான் அவர்களை வெகு நேரம் வரையில் சமாதானப்படுத்தி ஜனக் கும்பலில்லாத தனியான ஓர் இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, அவர்களும் குழந்தையும் திருவடமருதூரிலிருந்து காணாமல் போய்விட்டதாக எல்லோரும் சொல்லிக்கொண்ட வதந்தியைப் பற்றிய உண்மையான தகவலைச் சொல்லும்படி நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் அந்த வரலாற்றை என்னிடம் சொல்லக் கூடாதென்று வெகுநேரம் வரையில் தயங்கினார்கள். நான் அதைச் சொல்லும்படி வற்புறுத்திக் கேட்டதன் மேல் அவர்கள் எல்லா விவரங்களையும் சொன்னார்கள்’ என்று கூறிவிட்டு சிறிது நிறுத்தினாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட திவான் சாமியார் முற்றிலும் பிரமித்துப் போய்க் கற்சிலைபோல மாறி வீரம்மாளின் வாயைப் பார்த்தபடி இருந்தார். தமது ஆருயிர் மனையாட்டியும், செல்வத் திருமகனும் கந்தைத் துணிகளுடன் அலைந்து திரிந்து சத்திரத்தில் காணப்பட்டார்கள் என்ற செய்தி அவரது ஹிருதயத்தை இரண்டாய் பிளப்பது போலவே இருந்தமையால் சகிக்க வொண்ணாத அபாரமான துயரமும் அழுகையும் பொங்கி அழித் தொடங்கினார். ஆயினும், அவளது வரலாற்றை முற்றிலும் கேட்க வேண்டுமென்ற ஆவலினால் அவர் தம்மை அடக்கிக் கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தார்.

வீரம்மாள் மேலும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே அந்த வரலாற்றை நான் என் வாயில் வைத்து எப்படி வெளியிடப்