பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 11

தான் சயனித்துக் கொள்ளப் போவதாகக் கூறிவிட்டுத் தனது விடுதிக்குச் சென்று அவ்விடத்திலிருந்த மஞ்சத்தின் மீது உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். ஆனாலும், தான் சயனித்துத் துரங்க வேண்டுமென்ற எண்ணத்தையே அவள் கொள்ளவில்லை. பெரிய மனிதர்களான தனது சொந்த ஜனங்கள் எல்லோருக்கும் முன்னால், தான் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் துன்மார்க்கமான சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதாய் ருஜு ஏற்பட்டுப் போனதையெண்ணி யெண்ணி அந்த மடந்தையின் மனம் சகிக்க வொண்ணாத அபாரமான அவமானமும் வெட்கமும் அடைந்து சோர்ந்து தளர்ந்து ஒய்ந்து உட்கார்ந்து போய்விட்டது. அவளது தேகம் குன்றிச் செயலற்று வீழ்ந்து போயிற்று. அபாரமான துக்கமும் அழுகையும் ஊற்றெடுத்துப் பொங்கி யெழுந்தன. அவள் தனது கைகள் இரண்டையும் வைத்துத் தனது முகத்தை மறைத்துக் கொண்டு கண்ணிர் சொரிந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கித் தன்னையும் உலகையும் முற்றிலும் மறந்து விசனக் கடலில் மூழ்கி நைந்துருகிய வண்ணம் அலங்கோலமாகக் கட்டிலில் இரண்டொரு நாழிகை காலம் சாய்ந்து கிடந்தாள். அவளது மனத்தில் பலவகைப்பட்ட எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. “அடாடா என்ன என்னுடைய ஜாதக விசேஷம்! இப்படிப்பட்ட அபாண்டமான அவதூறுக்கும் மானபங்கத்துக்கும் ஆளாகவா நான் பெண்ணாய்ப் பிறந்தேன். ஐயோ தெய்வமே! நான் மனசாலும் கெட்ட காரியத்தை எண்ணாதிருக்கையில், பெருத்த இடி போன்ற இந்தப் பொல்லாங்கு வந்து சம்பவித்து விட்டதே! இனி நாளைய தினம் ஆளை அனுப்பி எவ்விதமான சமாதானம் சொன்னாலும், இந்தக் களங்கம் இனி மறையவா போகிறது! இன்ஸ்பெக்டருடைய விஷயத்தில் நாங்கள் சொல்லியனுப்பும் சமாதானத்தை ஜனங்கள் ஒருவேளை ஒப்புக் கொண்டாலும், இவர் எனக்குக் கடிதம் எழுதியதும், அதற்கிணங்கி நான் போனதும் அசாதாரணமான விஷயங்கள். ஆதலால், அது பற்றி யாகிலும், ஜனங்கள் என்னைக் குறித்து இழிவான அபிப்பிராயங் கொண்டு இளக்காரமாகவும் துாஷணையாகவும் பேசுவது நிச்சயமான விஷயம்: ஆகா! நான் என்ன காரியம் செய்து விட்டேன்! எவ்வளவுதான் துன்பம் நேருவதாக இருந்தாலும், ஜனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கான மார்க்கத்தை மீறித்