பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 35i

செய்து, அவளுடன் வண்டிக்குப் போய்ச் சேர்ந்தாள். சேர்ந்தவள் அந்த வேலைக்காரியையும் தன்னோடு கூட வண்டியில் உட்கார வைத்துக்கொள்ள, வண்டி புறப்பட்டு ஒரு நாழிகை காலத்தில் வண்ணாரப்பேட்டை பங்களாவிற்குள் போய்ச் சேர்ந்துவிட்டது. கோகிலாம்பாளை நம் அவ்வளவோடுவிட்டு, புரசைப்பாக்கம் பங்களாவில் நடந்த சம்பவங்களைக் கவனிப்போம். பொழுது விடிய, பூஞ்சோலையம்மாள் தனது படுக்கையை விட்டெழுந்த சமயத்தில், எதிரே இருந்த கடிதம் அவளது திருஷ்டியில் பட்டது. அந்த அம்மாள் மிகுந்த வியப்பும், ஆவலும் கொண்டு அதை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்க்க விஷயம் தெரிய வந்தது. திடீரென்று கோகிலாம்பாள் அவ்விதமான தீர்மானங்களைச் செய்தது பூஞ்சோலையம்மாளது மனத்திற்கு மிகுந்த சஞ்சலத்தை யும் வருத்தத்தையும் கொடுத்து வியப்பை உண்டாக்கியது. ஆனாலும், சிறிது நேரம் ஆழ்ந்து யோசனை செய்தபின், கோகிலாம்பாளின் யோசனைகள் யாவும் யுக்தமானவையாகவே பட்டன. ஆகவே, தான் அவளது விருப்பத்தின்படியே சகலமான காரியங்களையும் நடத்துவதென்று தீர்மானித்துக் கொண்ட வளாய் வெளியிற்சென்று தனது காலைக் கடமைகளை முடித்துக் கொள்வதில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தாள்.

முதல் நாள் இரவில் பூங்காவில் சுந்தரமூர்த்தி முதலியாரை விட்டுப் பிரிந்த செளந்தரவல்லியம்மாள் மிகுந்த குதுரகலமும், மனவெழுச்சியும் கொண்டவளாய் நிரம்பவும் விசையாக நடந்து பங்களாக் கட்டிடத்தையடைந்து தனக்கும் சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் நடந்த சம்பாஷணையின் விவரத்தையெல்லாம் தான் உடனே புஷ்பாவதியிடம் கூறவேண்டுமென்ற ஆவல் கொண்டவளாய் அவளது சயன அறைக்குப் போய்ப் பார்த்தாள். அவள் அதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பு தான் வேறு வழியாகப் பூஞ்சோலைக்குள் போய்விட்டமையால், அந்த அறை காலியாக இருந்தது. ஆனால், தன்னால் வைக்கப்பட்ட காகிதம் மாத்திரம் காணப்படவில்லை. அதன்மேல் வைக்கப்பட்டிருந்த தலையணை வெகு தூரத்திற்கப்பால் நகர்த்தி வைக்கப்பட் டிருந்தது. புஷ்பாவதி வந்து கடிதத்தைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தேடிக்கொண்டு பூஞ்சோலைக்காவது போயிருக்க