பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 159

சொந்த ஜனங்கள் யாவரும் நம்முடைய கலியாணத்திற்கு வரும்படி செய்ய வேண்டும். அதையும் நீ உங்கள் தமயனாரிடம் சொல்ல வேண்டும். இனி நீயும் உன் தமயனாரும் இப்போது முதல் இங்கேயே இருந்தால் தான், இன்னம் ஏழெட்டு தினங் களுக்குள் எல்லா முஸ்தீபுகளையும் செய்வதற்கு அவகாசம் சரியாயிருக்கும்’ என்றாள்.

அவ்வாறு அவள் கூறி வாய் மூடுமுன் வெளியிலிருந்து ஒரு வேலைக்காரன், ‘அம்மா!’ என்று நிரம்பவும் வணக்கமாகக் கூப்பிட்டான். செளந்தரவல்லி, “யார் அது? என்ன சங்கதி?” என்றாள். வேலைக்காரன் மெதுவாகத் தலையை நீட்டி, ‘மைலாப்பூரிலிருந்து இந்த அம்மாளுடைய தமயனார் வந்திருக்கிறார்கள்’ என்றான்.

அதைக் கேட்டவுடனே செளந்தரவல்லி கட்டிலடங்காக் களிப்பும் மனவெழுச்சியும் அடைந்து வேலைக்காரனை நோக்கி, “சரி; இந்த அம்மாள் நேற்று ராத்திரி படுத்துக் கொண்டிருந்தார் களல்லவா அந்த அறைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போ அம்மாள் இதோ வருகிறார்கள்” என்றாள். உடனே வேலைக் காரன் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான். செளந்தர வல்லியைவிடப் பன்மடங்கு அதிகரித்த மனவெழுச்சியும், ஆவலும் கொண்ட புஷ்பாவதி, “சரி; நானும் போகிறேன்” என்று கூறிய வண்ணம் எழுந்து நடந்தாள். உடனே செளந்தர வல்லி அவளைப் பார்த்துக் கொஞ்சலாகவும் நயமாகவும் பேசத்தொடங்கி, “புஷ்பாவதி உனக்குத் தெரியாததற்கு நான் சொல்ல வேண்டியதில்லை. எல்லா விஷயங்களையும் பேசி ஒழுங்காக முடிவு செய்துகொண்டு சீக்கிரமாக எனக்கு சந்தோஷச் சங்கதி கொண்டு வரவேண்டும்’ என்றாள்.

புஷ்பாவதி, “ஆகா! அப்படியே செய்கிறேன். இனி நீ எதைப் பற்றியும் கவலையே கொள்ள வேண்டாம். சகலமான ஏற்பாடு களையும் நான் உன் இஷ்டப்படியே செய்து முடிக்கிறேன்” என்று கூறியபின் அவ்விடத்தைவிட்டு வெளியில் போய்விட்டாள்.

இரண்டொரு நிமிஷ நேரத்தில் தமயனாரும் தங்கையும்

ஒதுக்குப்புரமாயிருந்த ஒர் அறையில் சந்தித்து ஆசனங்களில் அமர்ந்து நிரம்பவும் ரகளியமாக சம்பாஷிக்கத் தொடங்கினர்.