பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8O செளந்தர கோகிலம்

புஷ்பாவதி அவ்விடத்து சங்கதிகளில் அவருக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் யாவற்றையும் உடனே எடுத்துக் கூறினாள். கண்ணபிரான் கடிதம் எழுதிய சந்தர்ப்பம், கோகிலாம்பாள் மோசடியாக இன்ஸ்பெக்டரது மாளிகைக்குக் கொண்டு போகப்பட்டது, அவ்விடத்திலிருந்து தந்திரமாய்த் தப்பி வந்தது முதலிய வரலாற்றையும், முதல் நாள் இரவில் கோகிலாம்பாள் தோட்டத்திற்கு வந்து மறைந்திருந்து அவர்களது சம்பாஷ ணையைக் கேட்டது, அவளைத் தான் சந்தித்த காலத்தில், அவள் செளந்தரவல்லியைப் போலவே நடித்தது, பிறகு அவள் தனது தாய்க்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போனது, அந்தக் கடிதத்தின் விவரங்கள், அதைப் படித்த தாய் அதற்கு இணங்கி இருப்பது, செளந்தரவல்லியின் மனநிலைமை முதலிய விஷயங் களையெல்லாம் புஷ்பாவதி விரைவாகவும் தெளிவாகவும் தனது தமயனாரிடம் கூறினாள்.

அவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்ட சுந்தரமூர்த்தி முதலியார் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைந்து, “சரி, இரண்டு இடங்களிலும் நம்முடைய எண்ணப்படியே, எல்லா விஷயங் களும் நிறைவேறிவிட்டன. இனி காரியம் முடிந்த மாதிரிதான். இனி நாம் கலியான ஏற்பாடுகளைத்தான் கவனிக்க வேண்டும்,’ என்றார்.

புஷ்பாவதி : ஆம். அதெல்லாம் சரிதான். நம்முடைய ஜாதியாசாரப்படி கலியாணம் புருஷருடைய வீட்டில் நடக்க வேண்டியதல்லவா. செளந்தரவல்லியின் கலியாணம் நம்முடைய பங்களாவில் நடக்க வேண்டும். என்னுடைய கலியாணம் மைலாப்பூரார் பங்களாவில் நடக்க வேண்டுமே. இரண்டையும் எப்படியெப்படிச் செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்? மைலாப்பூரார் இந்த விஷயத்தில் என்ன சொல்லுகிறார்கள்?

சுந்தரமூர்த்தி முதலியார் : அதைப் பற்றி நான் ஆழ்ந்து யோசனை பண்ணி ஒருவிதமான முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இந்த அசந்தர்ப்ப சமயத்தில் இந்த பங்களாவில் நாம் இப்போது கலியாணத்தை நடத்துவது விகாரமாக இருக்கும். அதிகமான ஜனங்களும் வரமாட்டார்கள். மைலாப்பூராரையும் நாம் இங்கே அழைப்பது ஒழுங்காயிராது. அவர்களும் இங்கே