பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

செளந்தர கோகிலம்

சுவாமிகளே இது யார் இவர்கள் இந்தக் கஷ்டத்தையெல்லாம் நாமேன் பார்க்க வேண்டும்?” என்றார். உடனே உதவிச் சாமியார், “சுவாமிகளே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இந்தக் கலிகாலத்தில் தர்மதேவதை அதிக காலம் பொறுக்கிறதில்லை. நல்லவர்களுக்குச் சன்மானம் செய்வதற்குக் கொஞ்ச கால தாமசம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அக்கிரமங்களுக்கு கைமேல் பலன் கிடைத்து விடுகிறது. அதோ அடிபடுகிற குருடி யார் தெரியுமா? அவள்தான் தங்களுடைய சம்சாரத்தையும் குழந்தையையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்ட குடிகேடி பாருங்கள் தெய்வத்தின் தண்டனையை! தாங்கள் வரும் சமயத்தில், தங்களுக்குத் தெரியும்படி கடவுள் அவளுக்கு எப்பேர்ப்பட்ட மரியாதை நடத்தி வைக்கிறார் என்று பாருங்கள். அவளுக்கு இரண்டு கண்களும் அவிந்துபோய்விட்ட மாதிரியும் இருக்கிறது. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையுமென்பது பிரத்தியr மாகத் தெரிகிறது பார்த்தீர்களா!’ என்றார். அதைக்கேட்ட திவான் சாமியார் மிகுந்த மன இளக்கமும் இரக்கமும் அடைந்து, ‘ஐயோ பாவம்! இவளுடைய நிலைமை நிரம்பவும் பரிதாபகர மாக இருக்கிறது! நீங்கள் உள்ளே போய் அந்தப் பெண் பிள்ளையை அடக்கி, அடிக்க வேண்டாமென்று சமாதானப் படுத்துங்கள்’ என்றார்.

உடனே உதவிச் சாமியார், ‘அம்மா தையலம்மை! அடித்தது போதும், நிறுத்து, நிறுத்து” என்று உரக்கக் கூறியபடி உள்ளே நுழைந்து, “தையலம்மை தையலம்மை! அடிக்க வேண்டாம்” என்று மறுபடியும் கூறி அவளை அடக்கினார். திடீரென்று உள்ளே நுழைந்து பேசிய உதவிச் சாமியாரை நிமிர்ந்து பார்த்த தையலம்மை என்ற ஸ்திரீ சடக்கென்று பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போய்த் தான் செய்த காரியத்தைக் குறித்து மிகுந்த லஜ்ஜையும் அவமானமும் அடைந்தவளாய்க் குன்றிப்போய், “ஒகோ சாமியார் ஐயாவா! வாருங்கள் வாருங்கள். இவளுடைய தமையனார் பெண் வீட்டுக்குப் போய் இன்று சரியாய் ஒரு வாரமாகிறது. வீட்டில் அரிசியா, உப்பா, புளியா ஒரு சாமானுக்கு வழி இல்லை. நான் எங்கெங்கோ போய்க் கஷ்டப்பட்டுத் தேடி வந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுவது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது. இவள் ஒருத்தி எனக்குப் பெருத்த