பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 179

சநியனாய் வந்து இங்கே குந்திக்கொண்டு என் உயிரை உரிஞ்சி விடுகிறாள். ஒரு பெண் பிள்ளை நான் என்ன செய்கிறது! சுவாமிகளே யோசித்துப் பாருங்கள்’ என்றாள்.

உடனே உதவிச் சாமியார் நிரம்பவும் நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, “மற்ற சங்கதியை யெல்லாம் நாம் பின்னால் பேசலாம். நீ முதலில் கொஞ்சம் ஜலம் கொண்டு வந்து, இவள் மேல் வழியும் சாணியை அலம்பிவிடு. உன் புருஷன் இரும்பி வருகிற வரையில் உனக்கு வேண்டிய சாப்பாட்டுச் செலவுக்கு நான் பணம் கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்றார். அவரது சொல்லைக் கேட்ட தையலம்மை உடனே ஒரு பானையில் தண்ணிர் எடுத்து வந்து, அதை அந்தக் குருடியின் தலையில் கொட்டி அவளது உடம்பை சுத்தப்படுத்திவிட்டு, வேறொரு துணியையும் கொணர்ந்து அவளுக்கு உடுத்திவிட்டாள். குருடி அதைக் கண்டு நிரம்பவும் சந்தோஷமடைந்தவளாய், ‘நல்ல சமயத்தில் யாரோ ஒருவர் வந்து சேர்ந்தார். இல்லா விட்டால், இந்நேரம் இந்தப் படுபாவி என்னை அடித்து இழுத்துக் கொண்டுபோய் ரஸ்தாவில் தள்ளியிருப்பாள். இன்று நல்ல காலந்தான்’ என்று தனக்குத் தானே எண்ணியடி ஆந்தைபோல விழித்துக்கொண்டு மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். உடனே உதவிச் சாமியார் தையலம்மையை நோக்கி, “ஏனம்மா! நான் இதற்கு முன் ஒரு தடவை இங்கே வந்தது உனக்கு நினைவிருக்கிறதா’ என்றார். தையலம்மை : இருக்கிறது. உதவிச் சாமியார் : உன் புருஷர் என்றைக்குத் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

தையலம்மை : நேற்றைக்கு வரவேண்டியது; இன்னம் வரவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

உதவிச் சாமியார் : நான் மாயூரத்துக்குப் போகிறேன். போகும் போருது என் சிநேகிதரான உன் புருஷரைப் பார்த்து விட்டுப் போகலாமென்ற நினைவு உண்டாயிற்று. அதனால் தான் இப்படி வந்தேன். அவர் ஊரில் இல்லை. சரி, மறுபடி திரும்பி வரும்போது வந்து அவரைப் பார்க்கிறேன். அவருக்குக்